தெங்கேவில் முதல் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி ஆலை

தெங்கேவில் முதல் பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி ஆலை

2 mins read
b6cee961-1886-429c-a9d4-15f899a1bc8d
தெங்கே மிதக்­கும் சூரிய மின்­சக்தி நிலையத்தை பிரதமர் லீ சியன் லூங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் திருவாட்டி கிரேஸ் ஃபூ ஆகியோர் நேற்று விசைப்படகில் பார்வையிட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் முதல் பெரிய அள­வி­லான மிதக்­கும் சூரிய மின்­சக்தி நிலையம், தெங்கே நீர்த்­தேக்­கத்­தில் தொடங்­கப்­பட்­டி­ருக்­கிறது.

இதனை நேற்று தொடங்கி வைத்த பிர­த­மர் லீ சியன் லூங், நிலை­யத்­தின் வழி சிங்­கப்­பூர் நீடித்த நிலைத்­தன்மை பெறு­வதை நோக்கி பெரிய அடியை எடுத்­து­வைத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

சுமார் 45 காற்­பந்­துத் திடல்­கள் அளவிலான தெங்கே நிலை­யம் 60 மெகா­வாட் பீக் (MWp) அளவு சூரிய மின்­சக்தி உற்­பத்தி செய்­யக்­கூ­டி­யது.

இதனை செம்ப்­கார்ப் மிதக்­கும் சூரிய மின்­சக்தி நிறு­வ­னம் வடி­வ­மைத்து, கட்டி, நடத்தி வரு­கிறது. அதில் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் பங்­கா­ளி­யாக உள்­ளது.

சூரிய மின்­சக்தி நிலை­யத்தை,

நாட்­டின் சூரிய மின்­சக்தி மற்­றும் புதுப்­பிக்­கக்­கூ­டிய மின்­சக்­தித் துறை விரி­வ­டைய உத­வும் என்­றும் சிங்­கப்­பூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் இது­போன்ற இன்­னும் பல நிலை­யங்­களை அமைக்க வழி­வி­டும் என்­றும் பிர­த­மர் லீ கூறி­னார்.

தெங்கே சூரிய மின்­சக்தி நிலை­யத்­தில், 122,000 சூரிய மின்­த­க­டு­க­ளால் ஆன பத்து திட்­டு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு உற்­பத்­தி­யா­கும் மின்­சக்தி, தேசிய மின்­சா­ரக் கட்­ட­மைப்­புக்­குள் சேர்க்­கப்­படும். ஆண்­டு­தோ­றும் 16,000 வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­ க­ளுக்குத் தேவையான மின்­சா­ரத்தை தெங்கே நிலை­யத்தால் வழங்க முடியும்.

மிதக்­கும் சூரிய மின்­சக்தி நிலை­யங்­க­ளைக் கட்டுவதால் நீர்த்­தேக்­கங்­க­ளின் அகண்ட மேற்­ப­ரப்­பைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வும் பெரிய அள­வில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய நிலை­யங்­களை உரு­வாக்­க­வும் முடியும் என்­றார் திரு லீ.

தெங்கே நிலை­யம் வெற்­றி­க­ர­மா­கக் கட்­டப்­பட்­ட­தைத் தொடர்ந்து, பிடோக், லோவர் செலேத்­தார் நீர்த்­தேக்­கங்­க­ளி­லும் அத்­த­கைய நிலையங்கள் இவ்­வாண்டு இறு­தி­யில் கட்­டி­மு­டிக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.