புத்தாக்கமிக்க பொருளியல் தொடர்பில் ரவி மேனன்

புத்தாக்கமிக்க பொருளியல் தொடர்பில் ரவி மேனன்

1 mins read
e7fc2488-6426-4bea-b695-199e1f5de3a5
-

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு அம்சங்களை ஏற்றுமதி செய்யக்கூடிய பிரதான சேவைகளை வழங்குதல், பொருளியலை முழுமையாக மின்னிலக்கமயமாக்குதல், பசுமை சார்ந்த பொருளியலில் ஆசியாவிலேயே சிங்கப்பூர் முதலிடம் பெறுதல் என இவை யாவையும் சாதிக்கும் நிலை யில் சிங்கப்பூர் முழுக்க, முழுக்க புத்தாக்கமிக்கதாக விளங்க முடியும் என்றார் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன்.

அனைத்துலக திறனாளர் களுடன் கைகோத்துப் பணியாற்ற, சிங்கப்பூருக்கு வலுவான ஒரு மையமும் தேவைப்படுவதாக அவர் சுட்டினார். கொள்கை ஆய்வுக் கழகத்தில் 'ஒரு புத்தாக்கமிக்க பொருளியல்' என்ற தலைப்பை ஒட்டிப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது, வேலைக்கு ஆள் எடுப்பதில் பாரபட்சம் காட்டும் வழக்கத்தைத் தகர்த்தெறிவது போன்ற ஒரு சில படிகளை எடுக்கலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.