மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சீ ஹியன், புருணை மன்னர் ஹசனல் போல்கியாவின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அந்நாட்டுக்கு மூன்றுநாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது மனைவி திருமதி டியோ போ யிம்மும் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் உடன் சென்றுள்ளனர்.
புருணையின் பட்டத்து இளவரசர் அல்-முல்ஹ்டாடி பில்லாவை திரு டியோ நேற்று காலை சந்தித்த தார் என வெளியுறவு அமைச்சு கூறியது.