புளோக் 562 அங் மோ கியோ அவென்யூ 3ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே இன்று (ஜூலை 15) தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து 51 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக 39 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவ்விருவரும் ஒருவரை ஒருவருக்குத் தெரியும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் கூறியது.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்தபோது, அந்த ஆடவர், மாது இருவரிடமும் வெட்டுக்காயங்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், காயங்கள் காரணமாக அந்த ஆடவர் இறந்துவிட்டார்.
சிகிச்சைக்காக அந்த மாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 16) அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.
குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

