'சிறுவன் உயிரிழந்ததற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை'

'சிறுவன் உயிரிழந்ததற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை'

1 mins read
72c365db-9967-4dc0-8ec1-2a7f7ef1c709
-

அண்­மை­யில் 16 வய­துச் சிறு­வன் உயி­ரி­ழந்­த­தற்­கும் கொவிட்-19 தடுப்­பூ­சிக்­கும் தொடர்­பில்லை என்று சுகா­தார அமைச்சு ஃபேஸ்புக் வழி­யா­கத் தெளி­வு­படுத்தி இருக்­கிறது.

ஃபேஸ்புக், டெலி­கி­ராம், வாட்ஸ்­அப் குழுக்­களில் இடம்­பெற்ற ஓர் இரங்­கல் செய்தி குறித்­தும் தடுப்­பூ­சி­யால் ஏற்­பட்ட கடு­மை­யான பக்­க­வி­ளை­வு­க­ளால் அந்­தப் பதின்ம வய­துப் பையன் இறந்­து­விட்­டான் என்ற ஊகத்­திற்கு இட்­டுச்­சென்­றது குறித்­தும் தான் அறிந்­துள்­ள­தாக அமைச்சு கூறி­யுள்­ளது.

அத­னால்­தான் அந்­தப் பதி­வு­களி­லும் உரை­யா­டல்­க­ளி­லும் குறிப்­பிட்­டுள்­ள­து­போல அச்சிறு­வன் மாண்­ட­தற்­கும் கொரோனா தடுப்­பூ­சிக்­கும் தொடர்­பில்லை என்று தான் தெளி­வு­ப­டுத்­த வேண்­டிய தேவை ஏற்­பட்­டது என்­றும் அமைச்சு விளக்­க­ம­ளித்­து உள்ளது.

எடைக்­க­ரு­வி­ கொண்டு கடு­மை­யாக உடற்­ப­யிற்சி செய்­த­பி­றகு அச்சிறு­வன் மார­டைப்­பால் இறந்து­விட்­ட­தற்­கான கார­ணங்­கள் குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக இம்­மா­தம் 7ஆம் தேதி அமைச்சு தெரி­வித்து இருந்­தது. அவ­ரது இறப்­புக்கு கொரோனா தடுப்­பூசி சாத்­தி­ய­முள்ள ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

இதன் தொடர்­பில் விளக்­க­ம் அளிக்­கக் கோரி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் அமைச்­சைத் தொடர்­பு­கொண்­டது.

"சான்று ஏதும் இல்­லாத தக­வல்­க­ளைப் பரப்ப வேண்­டா­வென பொது­மக்­களை வலி­யு­றுத்­து­கிறோம். அப்­ப­டிச் செய்­வது, ஏற்­கெ­னவே துய­ரத்­திலுள்ள அந்தச்­சிறு­வ­னின் குடும்­பத்­திற்கு மேலும் வருத்­த­ம­ளிக்­கக்­கூ­டும் அல்­லது பொது­மக்­க­ளி­டம் தேவை­யில்­லாத அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம்," என்று தனது ஃபேஸ்புக் பதி­வில் அமைச்சு தெரி­வித்­திருக்கிறது.