வட்டார நாடுகளுக்கு உதவும் சாங்கி பேரிடர் தணிப்பு மையம்

2 mins read
cc12cda4-3d5f-4726-b71d-b01518e6656b
-

கொவிட்-19 பர­வ­லால் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள இவ்­வட்­டார நாடு­க­ளுக்கு உத­வு­வ­தில் சாங்கி வட்­டார மனி­த­நேய உதவி, பேரி­டர் தணிப்பு ஒருங்­கி­ணைப்பு மையம் (ஆர்­எச்­சிசி) முக்­கி­யப் பங்­காற்­றும்.

சிங்­கப்­பூர், வெளி­நா­டு­கள், மனி­த­நேய உத­விப் பணி­களில் ஈடு­பட்டு வரும் அனைத்­து­லக அமைப்­பு­கள், அரசு சாரா அமைப்பு­கள் ஆகி­ய­வற்­றின் பிர­தி­நி­தி­கள் ஆகி­யோர் பங்­கேற்ற கூட்­டத்திற்கு சாங்கி கடற்­ப­டைத் தளத்­தில் அமைந்­திருக்கும் அந்த மையம் நேற்று முன்­தி­னம் ஏற்பாடு செய்து இருந்தது.

அந்­தக் காணொ­ளிக் கலந்­துரை­யா­ட­லின்­போது கொவிட்-19 இடர்­தணிப்பு நட­வ­டிக்­கை­கள், தக­வல் பகிர்வு, பாதிக்­கப்­பட்ட பகு­தி­களுக்கு முக்­கிய மருந்­துப்­பொருள்­களைக் கொண்டு செல்­லு­தல் போன்­ற­வற்­றில் பல­த­ரப்பு ஒத்­து­ழைப்பு குறித்து விவா­திக்­கப்­பட்­ட­தா­கத் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

மனி­தா­பி­மான உதவி, பேரி­டர் தணிப்பு நட­வ­டிக்­கை­களை 'சாங்கி ஆர்­எச்­சிசி' ஒருங்­கி­ணைக்­கும்.

இக்­கட்­டான சூழல்­களில், பேர­ள­வி­லான தள­வா­டச் சவால்­க­ளைச் சமா­ளிக்க தளபத்திய, கட்­டுப்­பாடு, ஒருங்­கி­ணைப்­புத் திறன்­களில் பயற்சி பெற்ற இரா­ணு­வத்­தி­ன­ரின் பங்­க­ளிப்பு தேவைப்­ப­டு­கிறது என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் குறிப்­பிட்­டார்.

2008ல் 138,000க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழக்­கக் கார­ண­மான நர்­கிஸ் புயல் போன்று இந்த வட்­டா­ரம் பல மனி­தா­பி­மான நெருக்­கடி­களை எதிர்­கொண்­டதையடுத்து, 'சாங்கி ஆர்­எச்­சிசி' ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

"இப்­போது ஆசி­யான் உறுப்பு நாடு­கள் உட்­பட உல­கின் பல நாடு­களும் கொரோனா அலையை எதிர்­கொண்டு வரு­கின்­றன. அதற்கு இணங்க, நிலைமை மோச­மா­க­லாம் எனும் எதிர்­பார்ப்­பில், 'சாங்கி ஆர்­எச்­சிசி' உச்ச விழிப்­பு­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது," என்று டாக்­டர் இங் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­நி­லை­யில், வட்­டா­ரத்­தில் கொவிட்-19 பர­வல் நிலவரம் குறித்த தக­வல்­க­ளைத் தனது பங்­கா­ளி­களுக்கு வழங்க தனது 'ஆப்­பரா' கணி­னித் தக­வல் அமைப்பு இணை­ய­வா­யிலை மையம் பயன்­படுத்­திக்கொள்­ளும் என்று 'சாங்கி ஆர்­எச்­சிசி'யின் இயக்­கு­நர் கர்­னல் மெல்­வின் டான் தெரி­வித்து இருக்­கி­றார்.

"செயல்­பாட்டு அனு­ப­வத்­தை­யும் வட்­டார நாடு­க­ளின் இரா­ணு­வம், அரசு சாரா நிறு­வ­னங்­கள் எனப் பல்­வேறு அமைப்­பு­க­ளு­டன் தொடர்பு­க­ளை­யும் கொண்­டுள்ள 'சாங்கி ஆர்­எச்­சிசி'யால் உதவி, இடர்­த­ணிப்­புப் பணி­களை ஒருங்­கி­ணைக்க முடி­யும்," என்­றார் திரு டான்.

கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து, இவ்­வட்­டா­ரத்­தில் இயற்­கைப் பேரி­டர்­கள் நிகழ்ந்­த­போது மீட்பு, உத­விப் பணி­களை மேற்­கொள்ள வெளி­நாட்டு இரா­ணு­வத்­தின் உத­வியை ஒருங்­கி­ணைப்­ப­தி­லும் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தி­லும் 'சாங்கி ஆர்­எச்­சிசி' உதவி வரு­கிறது.

2015ல் நேப்­பா­ளத்­திற்­கும் 2018ல் லாவோ­சிற்­கும் பேரி­டர் தணிப்­புக் குழுக்­க­ளை­யும் அவ­ச­ர­கால உதவிப்­பொ­ருள்­க­ளை­யும் அம்­மை­யம் அனுப்பி வைத்­தது.