சீனாவின் சினோவேக் கொவிட்-19 தடுப்பூசி குறித்து கூடுதல் தரவு வந்துள்ளதை அடுத்து, சுகாதார அறிவியல் ஆணையம் அதனை மதிப்பிட்டு வருகிறது. "கூடுதல் தரவுகள் தொடர்பில் கவனமான, முழுமையான மறுஆய்வை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் அதனை முடிக்க இலக்கு கொண்டு உள்ளோம். அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்பட்டபின் அது குறித்து தெரிவிக்கப்படும்," என்று ஆணையம் கூறியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சினோவேக் தடுப்பூசி சேர்க்கப்படவில்லை. அத்தடுப்பூசியின் செயல்திறன் பற்றி மாறுபட்ட முடிவுகளை அனைத்துலக ஆய்வுகள் வெளியிட்டுள்ளன. ஆயினும், சிறப்பு அனுமதியின்கீழ் இங்கு அத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இம்மாதம் 3ஆம் தேதிவரை 17,296 பேர் அதன் முதல் தவணையைப் போட்டுக் கொண்டனர்.
சினோவேக் கூடுதல் தரவுகள் 4-6 வாரங்களில் மதிப்பிடப்படும்
1 mins read
-

