தொழில்துறை 4.0 தீர்வுகளை பயன்படுத்த கூடுதல் உதவி

தொழில்துறை 4.0 தீர்வுகளை பயன்படுத்த கூடுதல் உதவி

2 mins read
3eb2b199-907c-4ce9-a450-0065bd0efe02
-

தொழில்­துறை 4.0 தீர்­வு­கள் (industry 4.0 solutions) எனும் பெய­ரில் கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்ட திட்­டத்­தால் 90 நிறு­வ­னங்­கள் பல­ன­டைந்­துள்­ளன. அத்­திட்­டத்­தின் மூலம் நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்­த­லாம்.

இந்த நிறு­வ­னத்­தில் உள்ள கிட்­டத்­தட்ட 280 பத­வி­கள் பணி வடி­வ­மைப்­புக்­காக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

உற்­பத்­தித்­துறை நிறு­வ­னங்­களில் பல ஆண்­டு­க­ளாக இருந்­து ­வ­ரும் மேற்­பார்­வை­யா­ளர், செயல்­மு­றைப் பிரிவு நிர்­வா­கி­கள், பொறி­யா­ளர்­கள் ஆகிய பத­வி­கள் இவற்­றில் அடங்­கும்.

புதிய அணு­கு­மு­றை­யால் ஏறத்­தாழ 1,500 ஊழி­யர்­க­ளின் வேலை வடி­வ­மைப்பு மாறக்­கூ­டும்.

அவர்­கள் மேலும் முக்­கி­ய­மான பணி­களில் ஈடு­பட அது வகை செய்­யும் என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் தெரி­வித்­தார்.

தொழில்­துறை 4.0 தீர்­வு­கள் திட்­டம் குறித்து அவர் நேற்று முன்தினம் கூடு­தல் விவ­ரங்­க­ளைத் தந்­தார்.

இத்­திட்­டத்தை சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­ அமைப்பும் சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­ன­மும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் தொடங்­கின.

2022ஆம் ஆண்­டுக்­குள் மேலும் 210 உற்­பத்­தித்­துறை நிறு­வ­னங்­

க­ளுக்கு இத்­திட்­டம் உத­விக்­க­ரம் நீட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குறிப்­பாக சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நிறு­வ­னங்­க­ளின் செயல்­முறை­களில் உள்ள குறை­பா­டு­களை அடை­யா­ளம் காண புதிய திட்­டம் உத­வும்.

அதை­ய­டுத்து, தொழி­லா­ளர் உற்­பத்­தித்­தி­றன் துரி­த­மா­கச் செயல்­ப­டு­தல் போன்ற சவால்­களை எதிர்­கொள்ள வழி­காட்­டும் வகை­யில் எட்டு வாரப் பயிற்­சித் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.

பயிற்­சித் திட்­டத்தை 'மெக்­கின்சி அண்ட் கம்­பனி', 'இஒய்' ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த நிபு­ணர்­கள் வழி­ந­டத்­து­வர்.

தொழில்­துறை 4.0 தீர்­வு­கள் திட்­டத்தை நிறு­வ­னங்­கள் சோத­னை­மு­றை­யாக நடத்­திப் பார்க்­க­லாம். அவ்­வாறு செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்கு திட்­டத்தை நடை

­மு­றைப்­ப­டுத்த உத­வும் படிப்­ப­டி­யான வரை­ப­டம் தரப்­படும்.

இந்த வரை­ப­டம் ஊழி­ய­ரணி உரு­மாற்­றத்­துக்­குப் பெரி­தும் ஆத­ர­வ­ளிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. திட்­டத்­தால் பல­ன­டைந்த 90 நிறு­வ­னங்­கள் செல­வு­க­ளைக் குறைத்து வரு­மா­னத்தை அதி­க­ரித்து $60 மில்­லி­யன் ஈட்­டும் சாத்­தி­யத்தை ஏற்­ப­டுத்­தித் தரும் செயல்­மு­றை­களை அடை­யா­ளம் கண்­டுள்­ளன. திட்டத்தால் பலனடைந்த சூப்பர்ஃபுட்ஸ் நிறுவனத்தின் செயல்முறையை அமைச்சர் டான் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடு உற்பத்தித் துறையிடமிருந்து வந்தது.