வான்குடை சாகசப் பயிற்சியின்போது காயமுற்ற 'ரெட் லயன்ஸ்' வீரர்

வான்குடை சாகசப் பயிற்சியின்போது காயமுற்ற 'ரெட் லயன்ஸ்' வீரர்

2 mins read
408e68bb-50ba-4801-a819-921377f74306
காயமடைந்த வான்குடை சாகச வீரர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தரையிறங்கியபோது அந்த வீரர் மீது கட்டப்பட்டிருந்த கொடி புல்தரையில் சிக்கிக்கொண்டதால் அவர் விழுந்தார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய தினத்­துக்­கான ரெட் லயன்ஸ் வான்­குடை சாக­சக் குழு நேற்று பயிற்­சி­யிவ் ஈடு­பட்­டது.

பயிற்­சி­யின்­போது எதிர்­பா­ராத வித­மாக வான்­குடை வீரர் ஒரு­வர் காய­ம­டைந்­தார்.

பீஷான் வட்­டா­ரத்­தில் உள்ள ஜங்­ஷன் 8 கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் இருக்­கும் திட­லில் அவர் தரை­யி­றங்­கி­ய­போது அவர் மீது கட்­டப்­பட்­டி­ருந்த கொடி ஒன்று புல்

­த­ரை­யில் சிக்­கிக்­கொண்­டது.

இத­னால் அவர் அந்­தப் புல்­

த­ரை­யில் விழுந்து காய­முற்­றார். அங்­கி­ருந்த மருத்­துவ ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக அவரை நோக்கி விரைந்­த­னர்.

அவ­ரது கழுத்­தில் கட்­டு­போட்டு தூக்­குப் படுக்­கை­யில் அவரை வைத்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

இந்த விபத்து நேற்று பிற்­ப­கல் 2 மணி அள­வில் நிகழ்ந்­தது. வான்­குடை வீரர்­கள் இரண்­டாம் சுற்று சாக­சப் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­போது விபத்து நிகழ்ந்­தது.

அதற்கு முன்பு காலை 9 மணி அள­வில் பயிற்­சி­யில் ஈடு­பட்ட ஐந்து வீரர்­களும் வெற்­றி­க­ர­மாக தரை­யி­றங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தேசிய தினக் கொண்­டாட்­டங்­

க­ளின் ஒரு பகு­தி­யாக நாட்­டில் பல்­வேறு இடங்­களில் அடுத்த மாதம் 7ஆம், 8ஆம் தேதி­களில் ரெட் லயன்ஸ் வான்­குடை வீரர்­கள் வான்­குடை சாக­சங்­களில் ஈடு­பட இருக்­கின்­ற­னர்.

ரெட் லயன்ஸ் வீரர்­கள் தரை­யி­றங்­கும் இடங்­கள் இன்­னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. தரை­யி­றங்­கு­வதற்கு ஏற்ற இடங்­களை மதிப்­பிட வான்­குடை சாக­சப் பயிற்­சி­கள் நடத்­தப்­படும் என்று சிங்­கப்­பூர் ஆயு­தப் படை நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

வான்­குடை வீரர்­கள் தரை­

யி­றங்­கு­வ­தைப் பார்த்து பதற்­றம் அடைய வேண்­டாம் எனப் பொது­மக்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கிறது.

பாது­காப்பை முன்­னிட்டு வான்­குடை சாகச வீரர்­கள் தரை­யி­றங்கு ­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்ட இடங்­

க­ளுக்­குள் செல்ல வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.

வான்குடை சாகசப் பயிற்சியின்போது ரெட் லயன்ஸ் வீரருக்கு விபத்து ஏற்பட்டிருப்பது இது முதல்முறையல்ல.

2017ஆம் ஆண்டில் எஃப்1 பந்தயத் தடத்தில் தரை இறங்கியபோது வீரர் ஒருவர் காயமடைந்தார்.

வானில் இருந்தபோது இன்னொரு வீரரின் வான்குடையுடன் அவர் சிக்கிக்கொண்டதால் அந்த விபத்து நிகழ்ந்தது.