நகராட்சி விவகாரங்கள் தொடர்பாக தகவல் அளிக்க குடியிருப்பாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கைகொடுக்க இருக்கிறது.
புதிய செயற்கை நுண்ணறிவு சேட்போட் தளத்தைப் பயன்படுத்தி குடியிருப்பாளர்கள் தகவல் அளிக்கலாம்.
தற்போதைய ஒன்சர்வீஸ் செயலி யைப் போல ஏற்கெனவே வகுக்கப்பட்ட பிரிவுகளின்கீழ் குடியிருப்பாளர்கள் தகவல் அளிக்கத் தேவைஇல்லை.
+65 9821 9004 எனும் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது டெலிகிராம் செயலியில் உள்ள OneServiceSGBot மூலமாக வோ குடியிருப்பாளர்கள் குறுஞ்செய்தி அனுப்பிலாம்.
தகவல் அளிக்க விரும்பும் குடியிருப்பாளர்களைப் புதிய சாட்போட் வழிகாட்டும். குடியிருப்பாளர்கள் அனுப்பும் தகவலில் உள்ள சொற்களை வைத்து அதற்கு ஏற்ற சில பிரிவுகளை சேட்போட் காட்டும்.
அதிலிருந்து சரியான பிரிவைக் குடியிருப்பாளர்கள் உறுதி செய்யலாம். இதையடுத்து, குடியிருப்பாளர் அனுப்ப விரும்பும் தகவலை சரியான அமைப்பிடம் சேட்போட் சேர்த்துவிடும்.
தகவவில் உள்ள சொற்களை வைத்து சேட்போட் தளத்தால் சரியான அமைப்பை ஊகிக்க முடியாவிட்டால் முகவர் ஒருவரிடம் குடியிருப்பாளர்கள் பேசலாம். சோதனை முறையின்போது சேட்போட் தளத்தைப் பயன்படுத்துவது எளிதாக இருப்பதாக 450 பேர் தெரிவித்
தனர்.

