ராணுவ நிபுணத்துவப் பயிற்சியை ஒரே நேரத்தில் முடித்த தந்தை, மகன்

ராணுவ நிபுணத்துவப் பயிற்சியை ஒரே நேரத்தில் முடித்த தந்தை, மகன்

1 mins read
0581bb16-6730-4207-8228-f323bc70aaab
-

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ராணுவ நிபு­ணத்­து­வப் பயிற்­சியை 105 அதி­கா­ரி­கள் முடித்­துள்­ள­னர். இவர்­கள் ஆயு­தப் படை­யின் வெவ்­வேறு பிரி­வைச் சேர்ந்த அதி­கா­ரி­கள்.

பயிற்­சியை ஒரே நேரத்­தில் முடித்­த­வர்­களில் மகன்-தந்தை இணையும் அடங்­கும். 25 வயது ரோய் டானும் அவ­ரது தந்­தை­யான 53 வயது டான் கிம் சியோங்­கும் பயிற்­சி­யை ஒரே நேரத்­தில் முடித்­

த­னர்.

பயிற்­சியை முடித்த அதி­கா­ரி­

க­ளி­டம் தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது நேற்று இணை­யம் மூலம் பேசி­னார். மாறி வரும் உல­கில் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப செயல்­ப­டு­வது முக்­கி­யம் என்று திரு ஸாக்கி வலி­யு­றுத்­தி­னார்.

"பழைய, புதிய மிரட்­டல்­க­ளி­

லி­ருந்து நாட்டை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை தற்­காக்க வேண்­டும் என்­பதை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது. இணை­யம் வழி தாக்­கு­தல்­கள், பயங்­க­ர­வா­தம் ஆகி­யவை இவற்­றில் அடங்­கும்," என்­றார் அவர்.

"எத்­த­கைய மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டா­லும் அவற்றை எதிர்­கொள்ள சிங்­கப்­பூர் தயா­ராக இருப்­பதை உறுதி செய்ய தற்­காப்பில் தொடர்ந்து முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது.

பயிற்சியை ஒரே நேரத்தில் முத்த ME4 ரோய் டானும் அவரது தந்தை ME4 டான் கிம் சியோங்கும் (வலது).

படம்: தற்காப்பு அமைச்சு