ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களில் பொய்த் தகவல்கள் முறியடிக்க $700,000 திட்டம்

ஒலி, ஒளிபரப்பு ஊடகங்களில் பொய்த் தகவல்கள் முறியடிக்க $700,000 திட்டம்

2 mins read
71962bfc-65f0-406a-bd01-8873564f431d
-

ஒலி, ஒளி­ப­ரப்பு ஊட­கங்­களில் முழுப் பொய்த் தக­வல்­களை அடை­யா­ளம் காண அனைத்­து­லக போட்டி ஒன்றுக்கு 'ஏஐ சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இதை அது சிங்­கப்­பூர் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் செயற்கை நுண்­ண­றி­வுத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அது மேற்­கொள்ள உள்­ளது.

நம்­ப­க­மான ஊடக சவால் திட்­ட­மான இது ஐந்து மாத காலத்­துக்கு நீடிக்­கும். ஒலி, ஒளி­நா­டாக்­களில் செய்­யப்­பட்ட மாற்­றங்­க­ளைக் கண்­ட­றி­யும் வித­மாக உல­கின் செயற்கை நுண்­ண­றி­வுப் பிரி­யர்­களும் ஆய்­வா­ளர்­களும் இந்­தத் திட்­டத்­தின் மூலம் அதற்­கான தீர்­வு­களை வடி­வ­மைக்­க­வும் அதை சோதித்­துப் பார்க்­க­வும் ஊக்­கம் அளிக்­கிறது என்று 'ஏஐ சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

அனைத்­து­லக பங்­கேற்­பா­ளர்­களுக்கு ஊக்­கம் அளித்து அவர்­கள் மூலம் தீர்­வு­களை நாடு­வ­தால் இந்­தப் போட்டி சிங்­கப்­பூர் செயற்கை நுண்­ண­றிவு மைய­மாக உரு­வெ­டுக்க உத­வும் என ஏஐ சிங்­கப்­பூர் நிறு­வ­னம் விளக்­கம் அளித்­துள்­ளது.

இந்­தப் போட்­டியை உள்­ளூர் ஊட­கங்­க­ளான தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், மீடி­யா­கார்ப்­பின் சிஎன்ஏ ஏற்று நடத்­து­கின்­றன. இதற்­காக இவை 800 செய்­தித் தக­வல்­கள், நேர்­கா­ணல்­களை வழங்­கி­யுள்­ளன.

அத்­து­டன், போட்டி பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு 4,000 உண்­மை­யான ஒலி, ஒளி நாடாக்­களும் 8,000 பொய் அல்­லது போலி ஒலி, ஒளி நாடாக்­களும் வழங்­கப்­படும். இவற்­றின் உத­வி­யு­டன் பங்­கேற்­பா­ளர்­கள் தங்­கள் செயற்கை நுண்­ண­றிவு மாதிரி தீர்­வு­களை சோதித்­துப் பயிற்­சி­யில் ஈடு­ப­ட­லாம் என்று அது தெரி­வித்­தது.

இதைத் தொடர்ந்து அவர்­கள் தங்­க­ளுக்­குக் கொடுக்­கப்­படும் வீடி­யோப் பதிவு பெரும்­பா­லும் போலி­யா­னதா என்­பதை அவர்­கள் மதிப்­பீடு செய்ய வேண்­டும்.

இந்­தப் போட்­டி­யில் இயந்­தி­ரக் கல்வி, கணினி, ஊடக தட­ய­வி­யல் துறை­யில் அனு­ப­வம், பயிற்சி பெற்­ற­வர்­கள் கலந்­துெ­காள்­ள­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் போட்டி குறித்து கருத்­து­ரைத்த ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசி­ரி­ய­ரும், சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­தின் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கப் பிரி­வின் முதன்மை ஆசி­ரி­ய­ரு­மான திரு வாரன் ஃபெர்னாண்­டஸ், பொய்ச் செய்­தி­கள் ஊடக தளத்தை மாசு­ப­டுத்தி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். அது பர­வும்­போது படிப்­போர், கேட்­போர் உண்மை எது பொய் எது எனப் பிரித்­துப் பார்க்க சிர­மப்­ப­டு­கின்­ற­னர் என்று கூறி­னார்.

"இத­னால், முக்­கிய பிரச்­சி­னை­கள் குறித்து பய­னுள்ள முறை­யில் சமூ­கத்­தால் விவா­தம் மேற்­கொள்ள முயற்­சி­களை குலைக்­கிறது. இந்­தப் பிரச்­சி­னையை எதிர்­கொள்ள மக்­க­ளுக்கு உதவ ஊட­கங்­க­ளுக்கு பங்­குண்டு.

"இதற்­காக அவை தங்­க­ளி­டம் உள்ள அனைத்துச் சாத­­னங்­க­ளை­யும் தொழில்­நுட்­பங்­க­ளை­யும் பயன்­படுத்த வேண்­டும்," என்று திரு வாரன் ஃபெர்னாண்­டஸ் விவ­ரித்­தார்.