'ஃபேஸ்புக்' வழியாக மோசடி: சந்தேகத்தின்பேரில் பெண் கைது

'ஃபேஸ்புக்' வழியாக மோசடி: சந்தேகத்தின்பேரில் பெண் கைது

2 mins read
2f991155-3103-4e05-aeea-7b64c7dcf646
-

ஃபேஸ்புக் வாயி­லாக நான்கு பேரி­டம் பண­மோ­சடி செய்­த­­தாக சந்­தே­கத்­தின்­பே­ரில் பெண் ஒரு­வர் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரி­டம் போலிஸ் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது.

கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று கைது­செய்­யப்­பட்ட அந்த 26 வய­துப் பெண், ஆட­வர் ஒரு­வ­ரி­டம் தந்­தி­ர­மா­கப் பேசி தனது வங்­கிக் கணக்­குக்கு 300 வெள்ளி மாற்­றும்­படி கேட்­டுக்­கொண்­டார்.

அதை­ய­டுத்து, தாம் இந்­தப் பெண்­ணால் ஏமாற்­றப்­ப­டு­கி­றோம் என்­பதை அறிந்­து­கொண்ட அந்த ஆட­வர், உடனே இது­கு­றித்து போலி­சில் புகார் செய்­தார்.

இந்­தப் புகா­ரின் அடிப்­ப­டை­யில் நடந்த விசா­ர­ணை­யில் அந்­தப் பெண் கைது­செய்­யப்­பட்­டார்.

புகார் கொடுத்த அந்த ஆட­வ­ருக்கு முன்­னாள் சக ஊழி­யர் ஒரு­வ­ரி­டம் இருந்து, ஃபேஸ்புக் தக­வல் ஒன்று வந்­தது. அதில், தான் மிக­வும் இக்­கட்­டான நிலை­யில் உள்­ள­தா­க­வும் உட­ன­டி­யாக பணம் $300 தனது வங்­கிக் கணக்­குக்கு அனுப்பி உத­வு­மா­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இந்­தத் தக­வல் உண்­மை­யி­லேயே தனது முன்­னாள் சக ஊழி­ய­ரி­டம் இருந்­து­தான் வந்­துள்­ளது என்று நம்பி, அவர் கேட்­டுக்­கொண்ட தொகையை அந்த வங்­கிக் கணக்கில் போட்­டார்.

அதன்­பின்­னர், தனது சக ஊழி­ய­ரைத் தொடர்­பு­கொண்ட போது­தான் தாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டோம் என்­பதை உணர்ந்­த­தாக அந்த ஆட­வர் கூறி­னார்.

அவ­ரின் சக­ ஊ­ழி­ய­ரின் ஃபேஸ்புக் கணக்கு தற்­போது செயல்­பாட்­டில் இல்­லை­யென்­பது தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து அந்த ஆட­வர் இது­கு­றித்து போலி­சில் புகார் கொடுத்­தார்.

கைது­செய்­யப்­பட்ட அந்­தப் பெண், மேலும் மூவரை இது­போல தந்­தி­ர­மாக ஏமாற்­றி­யி­ருப்­பது முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இவர் மீதான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.