கொவிட்-19: புதிதாக 32 பேர் பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 32 பேர் பாதிப்பு

1 mins read
a28f082d-146b-4c94-9365-6d981f4686b6
-

இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 53 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய நோயாளிகளில் 32 பேர், பெருகிவரும் கேடிவி, கேளிக்கைக் கூட கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.

முன்னைய நோயாளிகளுடன் தொடர்பில் 24 பேர் இருந்ததாகவும் தொடர்புகள் இருந்த மேலும் 20 பேர் சோதனை நடவடிக்கைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டனர். ஒன்பது முன்னைய நோயாளிகளுக்கு தொடர்பு தடங்கள் அறியப்படவில்லை.

வெளிநாடுகளில் நோய்வாய்ப்பட்டு இங்கு எட்டு பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.