ஆடவரைக் கொன்றதாக வியட்நாமியப் பெண் மீது குற்றச்சாட்டு

ஆடவரைக் கொன்றதாக வியட்நாமியப் பெண் மீது குற்றச்சாட்டு

1 mins read
2e172498-b5f4-44e1-bda8-9b9fec6b2fa3
-

39 வயது வியட்நாமியப் பெண்ணின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அங் மோ கியோ வட்டாரத்தில் 51 வயது ஆடவரை அந்தப் பெண் தாக்கியதை அடுத்து இவ்வாறு நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 1 மணிக்கு புளோக் 562 அங் மோ கியோ அவென்யூ 3ல், இங்குயென் இங்கொக் கியாவ் என்ற அந்தப் பெண், 51 வயது திரு சோ வாங் கியூங் என்ற ஆடவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கியோவும் அந்த ஆடவரும் அடுக்குமாடி வீட்டுக்கு வெளியே பல காயங்களுடன் போலிசாரால் காணப்பட்டனர்.

இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர தெரிந்தவர்கள் என்றனர் போலிசார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திரு சோ, பின்னர் உயிரிழந்தார். கியோவின் வழக்கு ஆகஸ் 6ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.