பொங்கோலில் கொலை - நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர்

1 mins read
e1efb9c7-29dd-4b6b-96b0-3ddbf12e2e75
-

பொங்கோலின் மத்திய பகுதிய சுமாங் வோர்க்கில் நிகழ்ந்த கத்திக்குத்தின் தொடர்பில் ஓர் ஆடவர் நீதிமன்றத்தில் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

ஹெங் பூன் சாய் என்பவர் 46 வயது திரு கிம் வீ மிங்கைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். புளோக் 326ஏயிலுள்ள அடுக்குமாடி வீடு ஒன்றின் ஆறாவது மாடியில் அந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஹெங் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 3 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தை அடைந்த அதிகாரிகள், திரு கிம் காயமடைந்த நிலையில் மூச்சு பேச்சின்றி தரையில் கிடந்ததாகத் தெரிவித்தனர். அவ்விரு ஆடவர்களும் ஒருவரையொருவர் தெரிந்தவர்கள் என்று ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் காட்டுகின்றன.