ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஒரு சில நாட்கள் மழை ஓயாமல் பெய்தது. இனி மாதத்தின் இரண்டாவது பாதியில் மழை நாட்கள் குறையும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. ஒரு சில நாட்களில் வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்களன்று முற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பொழியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மொத்தத்தில் ஜூலை மாதம் சிங்கப்பூரில் பொழியும் மழை, வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் தினசரி பதிவாகும் வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களின் இரவு வேளையில் வெப்பமும் ஈரப்பதமும் வெப்பநிலையைக் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசுக்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

