சுய பரிசோதனை சாதனங்கள் இணையத்தில் விற்பனை

சுய பரிசோதனை சாதனங்கள் இணையத்தில் விற்பனை

1 mins read
26d2be89-65bb-4f6b-bc6c-8e7aeddf5d40
-

சுய­மாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­வ­தற்­கான சாத­னங்­கள் நேற்று முதல் இணை­யத்­தில் விற்­கப்­ப­டு­கின்­றன. அந்­தச் சாத­னங்­க­ளின் விலை $10 முதல் $13 வரை. இரு இணைய வர்த்­த­கத் தளங்­கள் அதற்­கான ஏற்­பா­டு­களில் இறங்கி உள்­ளன. வரும் நாட்­களில் இச்சாதனங்களுக் கான தேவை அதி­க­ரித்­தால் அதனை ஈடு­செய்­யும் வகை­யில் விநி­யோ­கத்தை அதி­க­ரிப்­ப­தில் அவை கவ­னம் செலுத்தி வரு­கின்­றன.

சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஐந்து பரி­சோ­த­னைச் சாத­னங்­களில் இரண்டு Qoo10 இணை­யத்­த­ளத்­தில் விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. அதே­போல Lazada இணைய வர்த்­தகத்தளம் Abbott நிறு­வ­னத்­தின் பரி­சோ­தனை சாத­னத்தை விற்­பனைக்கு விட்­டுள்­ளது. இவற்றை மூன்று முதல் ஏழு நாட்களில் வீடு களுக்கு விநியோகிப்பதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.