படிப்படியான சம்பள உயர்வுமுறைத் திட்டத்தின்கீழ் மேலும் ஒரு பிரிவினர் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியர்களும் சேர்க்கப்படுவர்

படிப்படியான சம்பள உயர்வுமுறைத் திட்டத்தின்கீழ் மேலும் ஒரு பிரிவினர் மின்படிக்கட்டு பழுதுபார்ப்பு ஊழியர்களும் சேர்க்கப்படுவர்

2 mins read
9652ae9b-fd28-4840-8aca-bd146667563c
(வலமிருந்து) என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், மனிதவளமூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது இருவரிடம் விளக்கம்தருகிறார் ஒரு தொழில்நுட்பர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்­தூக்கி பழு­து­பார்ப்பு ஊழி­யர்­க­ளு­டன் அடுத்த ஆண்­டி­லி­ருந்து உள்­ளூர் மின்­ப­டிக்­கட்டு பழு­து­பார்ப்பு ஊழி­யர்­களும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள்.

மின்­ப­டிக்­கட்டு பழு­து­பார்ப்பு ஊழி­யர்­களும் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று முத்­த­ரப்­புக் குழு சமர்ப்­பித்த பரிந்­து­ரையை அர­சாங்­கம் நேற்று ஏற்­றுக்­கொண்­டதை அடுத்து, இந்த இரு பிரிவு ஊழி­யர்­க­ளுக்­கும் 2023 ஜன­வ­ரி­யி­லி­ருந்து குறைந்­தது ஒரு மாதச் சம்­பள அள­வில் வரு­டாந்­திர போனஸ் வழங்­கப்­படும்.

என்­டி­யு­சி­யின் உத­வித் தலை­மைச் செய­லா­ளர் திரு ஸைனல் சப்­பா­ரி­யின் தலை­மை­யி­லான இந்த முத்­த­ரப்­புக் குழு, மின்­தூக்கி பழு­து­பார்ப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் மின்­ப­டிக்­கட்டு பழு­து­பார்ப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் 2023 முதல் 2028ஆம் ஆண்டு வரை வரு­டாந்­திர குறைந்­த­பட்ச சம்­ப­ளம் வழங்­கப்­பட வேண்­டும் என்று அர­சாங்­கத்­தி­டம் பரிந்­து­ரைத்­தது.

இதன் மூலம் அந்த மிகக் குறை­வான அள­வில் உள்ள மின்­தூக்கி பழு­து­பார்ப்பு ஊழி­ய­ருக்­கும் மின்­ப­டிக்­கட்டு பழு­து­பார்ப்பு ஊழி­ய­ருக்­கும் 2023ல் மாதம் குறைந்­தது $2,075 கிடைக்­கும். அதற்கு முந்­தைய ஆண்­டில் அவர்­க­ளுக்­குக் கிடைத்த சம்­ப­ளத்­தி­லி­ருந்து அது 12% அதா­வது $225 அதி­கம்.

அடிப்­படை சம்­ப­ளத்­து­டன் மிகு­தி­நே­ரம் மற்­றும் இதர சம்­ப­ளக் கூறு­க­ளை­யும் சேர்த்­தால் அவர்­கள் மாதம் $2,700 சம்­ப­ளம் பெறு­வார்­கள்.

இந்த மாற்­றங்­க­ளால் இந்­தத் தொழில்­து­றை­யில் உள்ள சுமார் 1,300 சிங்­கப்­பூ­ரர்­க­ளா­க­வும் நிரந்­த­ர­வா­சி­க­ளா­க­வும் உள்ள தொழில்­நுட்ப ஊழி­யர்­கள் பல­ன­டை­வார்­கள். அவர்­களில் 44 விழுக்­காட்­டி­னர் 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள்.

தற்­போது இந்­தத் தொழில்­துறை­யில் 3,050 தொழில்­நுட்­பர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள். அவர்­களில் 1,750 பேர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள்.

இந்த ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் உள்ள கிட்­டத்­தட்ட 70,000 மின்­தூக்­கி­க­ளை­யும் 7,000 மின்­ப­டிக்­கட்­டு­க­ளை­யும் பழு­து­பார்க்­கி­றார்­கள்.

மின்­தூக்கி பழு­து­பார்ப்பு ஊழி­யர்­க­ளுக்­கான படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை 2018ல் தன்­னார்வ அடிப்­ப­டை­யில் நிறு­வ­னங்­க­ளால் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. அந்த முறை 2022ல் கட்­டா­ய­மாக்­கப்­ப­ட­வுள்­ளது.

நேற்று ஜூரோங் ஈஸ்­டில் உள்ள ஜேடிசி சம்­மிட் கட்­ட­டத்­துக்கு, என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் திரு இங் சீ மெங்­கு­டன் வருகை புரிந்த மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, "படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை, பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் பட்­ட­தா­ரி­கள் இந்­தத் தொழில்­து­றை­யில் சேர ஊக்­கு­விக்­கப்­ப­டு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்.

"அடுத்த சில ஆண்­டு­களில், இந்­தத் தொழில்­து­றை­யின் அடிப்­படை சம்­பள முறை­யில் குறிப்­பி­டத்­தக்க உயர்வை நீங்­கள் காண­லாம்," என்று கூறி­னார்.