பொங்கோல் வட்டாரம் வந்துள்ள விவேக அஞ்சல்பெட்டிகள்

விவேக அஞ்­சல்­பெட்­டி­கள் மூலம் தங்­க­ளின் கடி­தங்­களை பொங்­கோல் வாசி­கள் சிலர் மேலும் வச­தி­யா­கப் பெற­வுள்­ள­னர். அடுத்த வெள்­ளிக்­கி­ழமை முதல் 'போஸ்ட்­பால்' என்ற அமைப்­பு­முறை மூலம் சுமாங் லேன் புளோக் 226B குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்­க­வுள்­ளது. கைபேசி செயலி ஒன்­றின் மூலம் தங்­க­ளுக்கு அஞ்­சல் வந்­தி­ருப்­ப­தை­யும் தெரி­விக்­கும் இந்த 'போஸ்ட்­பால்'.

எடுக்­கப்­ப­டாத அஞ்­சல் எத்­தனை என்­ப­தைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கண்­கா­ணிக்க முடி­வ­து­டன் தங்­கள் சார்­பாக அஞ்­ச­லைப் பெற்­றுக்­கொள்­ளும் அனு­ம­தி­யை­யும் புளோக்­வா­சி­கள் பிற­ருக்கு அளிக்க முடி­யும். 'சிங்­போஸ்ட்' நிறு­வ­னத்­து­டன் எந்­தி­ர­வி­யல், தானி­யக்க நிறு­வ­னம் 'ப்பி­பிஏ குருப்' இணைந்து இவ்­வி­வேக அஞ்­சல்­பெட்டி திட்­டத்தை உரு­வாக்­கி­யது.

புளோக்­கின் 96 குடும்­பங்­களும் அஞ்­சலை இத்­த­கைய விவேக அமைப்­பு­மு­றை­யில் பெற்­றுக்­கொள்­ளும் முன்­னோட்­டத்­தின் இரண்­டா­வது குழு­வா­கும். இதற்­கு­முன் கிள­மெண்டி வட்­டா­ரத்­தில் இரண்டு புளோக்­கு­களில் இம்­முன்­னோட்­டத் திட்­டம் வெற்­றி­க­ர­மாக நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்­டது. 80% வீடு­கள் திட்­டத்­தின் கீழ் இணைய விண்­ணப்­பித்­த­து­டன் விவேக அமைப்பு­முறை மூலம் ஏறத்தாழ 20,000 அஞ்­சல்­கள் விநி­யோ­க­மும் செய்­யப்­பட்­டன.

பொங்­கோல் வட்­டா­ரத்­தில் இளம் குடும்­பங்­கள் அதி­கம் இருப்­ப­தால் இத்­திட்­டத்­திற்கு கிள­மெண்டி வட்­டா­ரத்­தைக் காட்­டி­லும் கூடு­தல் வர­வேற்பு கிடைக்­கும் என்று சிங்­போஸ்ட் உள்­ளூர் அஞ்­சல் மற்­றும் பொட்­ட­லப் பிரி­வின் தலை­வர் திரு­வாட்டி நியோ சூ யின் தெரி­வித்­தார். பல­ரும் வீட்­டி­லி­ருந்து வேலை பார்ப்­ப­தால் இத்­திட்­டம் பேரு­த­வி­யாக இருக்­கும் என்று பொங்­கோல் வெஸ்ட் எம்பி திரு­வாட்டி சுன் ஷுவெ­லிங் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!