சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த மாதம் அதிகரித்தது. எதிர்பார்க்கப்பட்டதை விட ஏற்றுமதி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மின்னணுவியல் பொருட்கள் மின்னணுவியல் சாரா பொருட்
களின் ஏற்றுமதி இதற்கு முக்கிய காரணம். கடந்தாண்டு எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி மிகவும் குறைவாக இருந்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் பதிவான 8.6 விழுக்காடு வளர்ச்சி யைவிட கடந்த மாதத்தில் ஏற்றுமதி அதிகரித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.
புளும்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பகுப்பாய்வாளர்களின் முன்னுரைப்பைவிட கடந்த மாதத்துக்கான ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம். ஏற்றுமதி எட்டு விழுக்காடு உயரும் என்று அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.
மாதத்துக்கு மாதம் அடிப்படையில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த மாதம் 6 விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு முந்திய மாதத்தில் அது 0.2 விழுக்காடு குறைந்தது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்
படையில் மின்னணுவியல் பொருட்
களுக்கான ஏற்றுமதி கடந்த மாதம் 22.5 விழுக்காடு ஏற்றம் கண்டது.
கடந்த மே மாதத்தில் அது 11 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
கணினி ஏற்றுமதி 130.2 விழுக்காடு அதிகரித்தது.
ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுகளுக்கான ஏற்றுமதி 14.9 விழுக்காடு உயர்ந்தது.
இருமுனையம் கொண்ட பகுதி மின்கடத்தி, மூன்று இணைப்புகள் கொண்ட பகுதி மின்கடத்தி ஆகியவற்றுக்கான ஏற்றுமதி 32.2 விழுக்காடு அதிகரித்தது.
மின்னணுவியல் சாரா ஏற்றுமதி கடந்த மாதம் 13.2 விழுக்காடு அதிகரித்தது. கடந்த மே மாதத்தில் அது 7.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது. சிறப்பு இயந்திரங்களுக்கான ஏற்றுமதி 43.2 விழுக்காடு அதிகரித்தது.
எரிபொருள் ரசாயனத்துக்கான ஏற்றுமதி 51.2 விழுக்காடு உயர்ந்தது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய பத்து சந்தைகளுக்கு சிங்கப்பூரிலிருந்து பொருட்களின் ஏற்றமதி அதிகரித்தது. ஆனால், அமெரிக்கா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்துள்ளது.
எண்ணெய் சாரா ஏற்றுமதி அதிகரிப்புக்கு சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது முக்கிய காரணம். சீனாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது 27.6 விழுக்காடு அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது 36.7 விழுக்காடு உயர்ந்தது.
தைவானுக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது 41.4 விழுக்காடு அதிகரித்தது.

