பணிப்பெண் துன்புறுத்தல் வழக்கு; மேல்முறையீடு நிராகரிப்பு

பணிப்பெண் துன்புறுத்தல் வழக்கு; மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
5c2bd242-d62b-4b1e-9fe5-6d6959b18782
-

பணிப்­பெண்­யைத் துன்­பு­றுத்­திய குற்­றத்­துக்­காக 40 வயது ஃபர்ஹா டெசீ­னுக்­கும் அவ­ரது கண­வ­ரான 42 வயது முகம்­மது தஸ்லீமுக்கும் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தீர்ப்பை எதிர்த்து இரு­வ­ரும் மேல்­மு­றை­யீடு செய்­த­னர்.

இந்­நி­லை­யில், மேல்­மு­றை­யீட்டை உயர் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­து­விட்­டது. ஃபர்­ஹா­னுக்­குக் கடந்த ஆண்டு ஓராண்டு ஒன்­பது மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவ­ரது கண­வ­ருக்கு நான்கு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இரு­வ­ரும் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­கள்.

அவர்­க­ளது பணிப்­பெண்­ணா­க இருந்த திரு­வாட்டி அமன்­டிப் கோர் இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர்.

திரு­வாட்டி கோரை ஃபர்­ஹா­வும் அவ­ரது கண­வ­ரும் பல­முறை அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட இரண்டு மாதங்­

க­ளுக்­குக் கொடு­மை­களை அனு­

ப­வித்த திரு­வாட்டி கோர், சன்­னல் வழி­யாக வெளி­யேறி தப்­பித்­தார்.

மேல்­மு­றை­யீடு நிரா­க­ரிக்கப்­

பட்­டால் தீர்ப்பை ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக இரு­வரும் கூறி­யி­ருந்­ததை நீதி­பதி கண்­ணன் ரமேஷ் சுட்­டி­னார்.

ஃபர்ஹாவின் கண­வர் நாளை மறு­நாள் சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்குகி­றார்.

வரும் நவம்­பர் மாதம் 1ஆம் தேதி வரை சிறைத் தண்­ட­னை­யைத் தள்­ளி­வைக்க ஃபர்­ஹா­வுக்கு நீதிபதி அனு­மதி அளித்­தார்.

அதற்குள் அவரது கணவர் விடுதலை செய்யப்படுவார் என்று நம்பப்படுகிறது.

ஃபர்ஹா- தஸ்லீம் தம்பதியரின் இரு மகன்களைப் பார்த்துக்கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களது மகன்களில் இருவருக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது.