2019ஆம் ஆண்டில் ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆறு பெண்கள் மீது கார் மோதியது. அவர்களில் இருவர் மாண்டனர்.
நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஆறு பெண்களும் பணிப்பெண்கள்.
விபத்துக்குக் காரணமான காரை ஓட்டியதாகக் கூறப்படும் சோங் கிம் ஹோவின் வழக்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்று வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் நடைபெறும்.
மலேசியரான 65 வயது போங் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றை சோங் ஏற்க மறுத்துவிட்டதாக அறியப்படுகிறது.
இதுதொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூர் நிரந்தரவாசி யான சோங் மீது ஆபத்தான முறையில் கார் ஓட்டியது தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

