மோசடி, ஊழல் குற்றங்களைப் புரிந்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தை (என்யுஎஸ்) ஏமாற்ற சதித் திட்டம் தீட்டியதாக மூன்று பேர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பல்கலைக்கழகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பகிரந்துகொள்ள என்யுஎஸ்சில் ஆய்வக நிர்வாகியாகப் பணிபுரிந்த 33 வயது லியாவ் ஜின்லே, 34 வயது கான் யூ ஆன், 33 வயது சேண்டி டான் வெய் ஜியே ஆகியோரின் நிறுவனங்களுடன் சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவருக்கும் எதிராக மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மூவரும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
லியாவ் மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கான் மீது ஏழு குற்றச்சாட்டுகளும் டான் மீது நான்கு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
இணையம் மூலம் மோசடி;
ஆடவர் கைது

