சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் காதலர்கள் அல்லது காதலிகள் 'குடும்ப உறவுகள் வழித்தடம்' மூலமாக சிங்கப்பூர் வருவதற்கான தெரிவு கடந்த மார்ச் மாதமே நீக்கப்பட்டுவிட்டது என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்தத் தெரிவு மூலமாகத்தான், கேடிவி கிருமித்தொற்றுக் குழுமத்தில் முதன்முறையாக கிருமி பாதிப்பு இருப்பது தெரியவந்த வியட்னாமியப் பெண் சிங்கப்பூர் வந்தார். தமது சிங்கப்பூர்க் காதலர் மூலமாக அவர் இங்கு வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வாசிகளின் காதலர்கள் அல்லது காதலிகள் 'குடும்ப உறவுகள் வழித்தடம்' மூலமாக சிங்கப்பூர் வர அனுமதிக்கப்பட்டது.

