பிரதமர் லீ: மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் தடுப்பூசி நன்கொடை

பிரதமர் லீ: மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் தடுப்பூசி நன்கொடை

1 mins read
d9993f5e-4394-4fe4-9079-a22a410be961
'ஏபெக்' எனும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராகவுள்ள 21 நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையில் நேற்று கூடிப் பேசினர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

'கொவேக்ஸ்' திட்டத்தின்கீழ் பிற நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி நன்கொடை வழங்க சிங்கப்பூர் நோக்கம் கொண்டு இருக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

'ஏபெக்' எனும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராகவுள்ள 21 நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் முறையில் நேற்று கூடிப் பேசினர்.

அப்போது, நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் ஆசிய பசிபிக் நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி நடவடிக்கையில் முன்னணியில் உள்ள நாடுகள், மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கவேண்டும் என்றும் பிரதமர் லீ பேசினார்.

அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ளவும் தொடர்புகளை மறுகட்டமைக்கவும் வர்த்தகத்தைத் தாராளமயப் படுத்தவும் ஆசிய பசிபிக் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.