$28.5 மில்லியனுக்கு பங்களா விற்பனை

$28.5 மில்லியனுக்கு பங்களா விற்பனை

1 mins read
e2ffc0b6-4bfe-4968-81b9-fb65c239ea73
திரு லிம் ஊன் குய்னுக்குச் சொந்தமான, புக்கிட் தீமா 2வது அவென்யூவில் உள்ள பங்களா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

'ஹின் லியோங் டிரேடிங்' நிறுவனத்தைத் தோற்றுவித்த திரு லிம் ஊன் குய்னுக்குச் சொந்தமான, புக்கிட் தீமா 2வது அவென்யூவில் உள்ள முற்றுரிமையுடன் கூடிய 'குட் கிளாஸ் பங்களா'விற்கு $28.5 மில்லியன் விலை பேசப்பட்டு இருக்கிறது.

திரு லிம்மின் எண்ணெய் வணிகம் வீழ்ச்சி கண்டதை அடுத்து, அவரிடம் இருந்து $4.75 பில்லியன் கடன் தொகையை வசூலிக்கும் விதமாக, புக்கிட் தீமா பங்களா உட்பட சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள அவருக்குச் சொந்தமான ஒன்பது சொத்துகளை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.