மூர்க்கமாக நடந்துகொண்ட ஆடவர் கைதானார்

மூர்க்கமாக நடந்துகொண்ட ஆடவர் கைதானார்

1 mins read
9dfc1736-44d6-487d-ae6f-45eacaf9a973
-

லாவண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே இருக்கும் ஒரு காப்பிக்கடையில் போலிஸ் அதிகாரிகளை சண்டைக்கு வரும்படி சவால்விட்டதாகக் கூறப்படும் 41 வயது ஆடவர் ஒருவரை போலிசார் மின் அதிர்வு துப்பாக்கியைப் பயன்படுத்தி மடக்கி கைதுசெய்தனர்.

அந்த ஆடவர் காப்பிக்கடையில் இருந்தவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தார் என்றும் கூறப்படுகிறது.

அவர், போலிஸ் அதிகாரிகளிடத்திலும் தன்னை சுற்றி இருந்தோரிடமும் மூர்க்கமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை போலிசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வன்செயல்களைப் பயன்படுத்துவதை போலிஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அறிக்கை தெரிவித்தது.