கொவிட்-19: கேடிவி தொற்றுக் குழுமம் உணர்த்தும் பாடம்

சிங்கப்பூர் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் பல சவால்களைச் சமாளித்து வருகிறது. பல்வேறு நடவடிக்கைகளைத் திறமைக, செம்மைக குறித்த நேரத்தில் எடுத்து வருவதன் காரணமாக நிலைமை கட்டுக்குள் இருந்து வருகிறது. இருந்தாலும் அப்போதைக்கு அப்போது ஏதோ ஒரு வழியில் தொல்லைகள், மிரட்டல்கள் தலைதூக்கி வருகின்றன.

கொரோனா கிருமி பொல்லாதது. புதிய வீரியத் துடன் வேகமாக பரவ ஏற்ற சூழலை எதிர்நோக்கி அது இன்னமும் காத்துக்கொண்டே இருக்கிறது. உருமாறி பல வடிவங்களில் அது தன் வேகத்தைக் காட்டுகிறது. அலட்சியமாக இருந்து கொஞ்சம் இடம்கொடுத்துவிட்டால் மறுபடியும் அதிவேகமாக அது பரவிவிடும்.

இப்படி நிகழும்போது அது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் படிப்படிக முன்னேறிச் செல்லும் நம்மை மறுபடியும் பல படிக்கட்டுகள் கீழே இழுத்து விட்டுவிடுகிறது, நாம் பாடுபட்டு சாதித்தவை எல்லாம் பாழாகிவிடுகின்றன.

சிங்­கப்­பூ­ரில் கொரோ­னா­வுக்கு எதி­ரான போர் சென்ற ஆண்டு தொடங்­கி­யது முதலே பல ஏற்­ற­இறக்­கங்­கள் இருந்து வந்­துள்­ளன. சமூ­கத்­தொற்று அறவே இல்­லாத நிலை சாதிக்­கப்­பட்ட நேரத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் தொற்று கிடு­கி­டு­வென பெரு­கி­யது. அதைக் கட்­டுப்­ப­டுத்த குறித்த நேரத்­தில் இடை­விடா முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­ட­தால் அத்­த­கைய விடு­தி­களில் தொற்று ஒழிக்­கப்­பட்­டது. பொரு­ளி­யலை அகலத் திறந்­துவிட்டு அப்­பாடா என்று நிம்­மதிப் பெரு­மூச்சு விட இருந்த நேரத்­தில் உல­கில் வேறு பகு­தி­களில் கொரோனா கிருமி உரு­மாறி மீண்­டும் பர­வத்­தொ­டங்­கி­யது.

சிங்­கப்­பூர் எவ்­வ­ளவோ நிபந்­த­னை­கள், கட்­டுப்­பா­டு­கள் விதித்­தும், கொவிட்-19க்கு எதி­ரான தன் போராட்­டங்­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­திய போதி­லும் எப்­ப­டியோ டெல்டா என்ற உரு­மா­றிய கிருமி இங்கு புகுந்­து­விட்­டது. சமூ­கத்­தொற்று தலை­காட்­டி­யது.

பல தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­யின. சாங்கி, புக்­கிட் மேரா குழு­மங்­கள் அவற்­றில் குறிப்­பி­டத்­தக்­கவை. அவை டெல்டா கிருமி எந்த அள­வுக்கு வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யவை என்­பதை உணர்த்­தின.

என்­றா­லும் பரி­சோ­தனை, தடுப்­பூசி, தட­ம­றி­தல் போன்ற உத்­தி­களை முடுக்­கி­விட்டு அவற்­றை­யும் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கம் படு­வே­க­மாக பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்­தது. அவற்­றின் விளை வாக நிலைமை கொஞ்­சம் மேம்­பட்டு கட்­டுப்­பா­டு­கள் ஓர­ள­வுக்­குத் தளர்த்­தப்­பட்­டன.

இத்­த­கைய ஒரு நேரத்­தில்­தான் சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதத்­திற்­குப் பிறகு இது­வரை இல்­லாத அள­வுக்­கு சமூ­கத்­தில் ஒருநாளில் ஆக அதி­கம் பேர் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வம் சில நாட்­க­ளுக்கு முன் நிகழ்ந்­தது. அதற்கு கேடிவி கேளிக்கை இடங்­களும் உப­ச­ரிப்பு ஊழி­யர்­களும் சம்­பந்­தப்­பட்ட தொற்றுக் குழு­மமே முக்­கிய கார­ணம் என்­பது தெரியவந்­தது. கேடிவி மன­ம­கிழ் நிலை­யங்­களை மூட ஓராண்டுக்கு முன் உத்­த­ர­வி­டப்­பட்டது.

இருந்­தா­லும் அவை உணவு, பான நிலை­யங்­களா­கச் செயல்­பட விண்­ணப்­பிக்­க­லாம் என்று இந்த ஆண்டு தொடக்­கத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டது. ஆனாலும் அவற்­றில் பல­வும் உப­ச­ரிப்பு ஊழியர்களை வைத்­துக்­கொண்டு கூடு­த­லான பல சேவை­க­ளை­யும் வழங்கி வந்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

கேடிவி தொற்­றுக்­ கு­ழு­மம் நம்­ போராட்­டத்­தில் ஒரு பின்­ன­டை­வாக இருப்­ப­தால் அது ஏமாற்ற மளிக்­கும் ஒன்­றாக ஆகி இருக்­கிறது. அத்­த­கைய நிலை­யங்­க­களை நடத்­து­வோ­ரும் அங்கு சென்று வந்­தி­ருப்­போ­ரும் பொறுப்­பற்ற முறை­யில் நடந்­த­கொண்­ட­தால் வந்த வினை என்­று­தான் இதைச்­சொல்ல முடி­யும்,

வேண்­டு­மென்றே விதி­களை, கட்­டுப்­பா­டு­கள் நிபந்­த­னை­களை காற்­றில் பறக்­க­விட்­டு­விட்டு அவற்றை மீறி உப­ச­ரிப்­பா­ளர்­களை எல்­லாம் வைத்து கொண்டு, அவர்­களை வாடிக்கைளர்­கள் உள்­ளிட்ட பல­ரோ­டும் கலந்­து­ற­வா­ட­விட்டு, செயல்­பட்டு இருக்­கும்­பட்­சத்­தில் கேடிவி நிலை­யங்­களும் அவற்றை நடத்­து­வோ­ரும் அதற்­கான பொறுப்­பு­களை முழுமைக ஏற்­கத்­தான் வேண்­டும். இதுவே அவற்­றின் வாடிக்கைளர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

தங்­க­ளுக்கு மட்­டு­மின்றி, குடும்­பத்­தி­னர், சகாக்­கள், நண்­பர்­க­ளுக்கு மட்­டு­மின்றி, மொத்த சமூகத்­திற்­குமே அவர்­கள் ஆபத்தை ஏற்­ப­டுத்தி இருக்கிறார்­கள். கேடிவி கேளிக்­கைக் கூடங்­க­ளுக்­குச் சென்று வந்­தி­ருப்­போ­ரில் பல­ரும் தாங்­க­ளா­கவே முன் வந்து உண்­மை­யைத் தெரி­விக்க மறுப்­ப­தால் பல பிரச்சினை­ க­ளு­டன் தட­ம­றி­யும் நட­வ­டிக்­கை­யும் பாதிக்­கப்­ப­டு­கிறது.

அந்த நிலை­யங்­க­ளுக்­குச் சென்றுவந்து இருப்­போர் தாங்­க­ளா­கவே பரி­சோ­த­னைக்கு முன்வந்து தங்­கள் சமூ­கப் பொறுப்பை நிறை­வேற்ற வேண்­டும். பரி­சோ­தனை ரக­சி­ய­மாக இருக்கும் என்ற ஏற்­பாடு இருந்­தால் அது இவர்கள் முன்­வர ஓர­ள­வுக்கு ஊக்­கு­விக்­கும் என்று நம்­ப­லாம். கொரோனா காலத்­தில் மக்­கள் அன்­றாட வாழ்வைத் தொடர வேண்­டும். வேலை பார்த்­தாக வேண்­டும். இதற்கு அவர்கள் ஓர் இடத்­தில் சேர வேண்­டிய தேவை இருக்­க­லாம், இது அவ­சி­ய­மா­கவும் இருக்­க­லாம்.

இருந்­தா­லும் சமூக இடை­வெளி, முகக்­க­வ­சம் போன்ற நிபந்­த­னை­களை மீறா­மல் அவர்­கள் நடந்து­கொள்­ள­வேண்­டும். அதே வேளை­யில், பொழுது­போக்கு இடங்­கள் என்று வரும்­போது இன்­னும் கடுமைன கட்­டுப்­பா­டு­கள் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மானதாகத் தெரி­கிறது.

கேடிவி போன்ற மன­ம­கிழ் கூடங்­களில் உப­சரிப்­பா­ளர்­கள் இருந்­ததன் தொடர்­பில் பல­ரும் கேள்வி­களை எழுப்பி இருக்­கி­றார்­கள்.

தவ­றா­கப் பயன்­படுத்­தப்­படும் வாய்ப்பு இருப்­பதால், எல்­லைக்­ கட்­டு­பா­டு­க­ளைக் கடுமைக்கு­வது மட்டும் போதாது என்­றும் வேலை, வருகை, மற்­ற­வற்­றின் பேரில் வெளிநாட்­டி­ன­ருக்­குக் கொடுக் கப்படும் அனு­மதி­யை­க் கடுமைக்க வேண்­டும் என்­றும் குரல் எழுந்துள்ளது.

அனு­மதி பெற்று இங்கு வந்து விதி­களை மீறி செயல்­ப­டு­வோர் தங்­கள் செய­லுக்­கான பிர­தி­ப­லனை அனு­ப­விக்க வேண்­டும்.

அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால், கொவிட்-19க்கு எதிரான இடைவிடா போர் இப்போதைக்கு முடிது, அதில் முழு வெற்றி காண முடிது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது அவசிய மானது. ஒருவர் இடம் கொடுத்தாலும் கிருமி பரவி பெரும் சமூகப் பிரச்சினைகிவிடும் என்பதை எடுத்துக்காட்டி கேடிவி தொற்றுக் குழுமம் நம்மை எச்சரிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!