இன நல்லிணக்க ஆய்வரங்கில் அமைச்சர்: பல இன, பல தலைமுறை கருத்து முக்கியம்

பல இனங்­கள், பல தலை­மு­றை­களைச் சேர்ந்த இனப் பிரச்­சி­னை­கள் பற்­றிய வெவ்­வே­றான கண்­ணோட்­டங்­க­ளை­யும் கருத்­து­க­ளை­யும் சிங்கப்பூர் அங்­கீ­க­ரிக்க வேண்­டும். அவற்றை ஒருபோதும் அலட்­சி­யப்­ப­டுத்­தி­வி­டக்கூடாது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கப்­பூ­ரில் எல்லா இனத்­த­வ­ருக்­கும் உரிய பொது­வான வாய்ப்பு வச­தி­களை தொடர்ந்து பெரி­தாக்கி விரி­வு­ப­டுத்­தும் முயற்­சி­க­ளின் அடிப்­படை, அத்­த­கைய பல­த­ரப்­பட்ட கண்­ணோட்­டங்­களை முக்­கி­ய­மா­ன­தா­கக் கரு­து­வ­தில்­தான் இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

அவை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நடை­முறை உண்­மை­க­ளைப் பிர­தி­பலிப்­பதாக அமைச்சர் தெரி­வித்­தார்.

ஜாமியா சிங்­கப்­பூர் ஏற்­பாட்­டில் கேலாங்­கில் இருக்­கும் ஜாமியா இஸ்­லா­மிய நிலை­யத்­தில் நடந்த இன நல்­லி­ணக்க ஆய்­வ­ரங்­கில் அமைச்­சர் உரை­யாற்­றி­னார்.

ஆய்­வ­ரங்­கில் உரை­யாற்­றிய வெளி­யு­றவு அமைச்­சின் பொதுத் தூத­ரும் எஸ். ராஜ­ரத்­னம் அனைத்­து­லக ஆய்வுப் பள்­ளி­யின் நிர்­வா­கத் துணைத் தலை­வ­ரு­மான ஓங் கெங் யோங், சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­வர் மற்­றொ­ரு­வரைச் சகித்­துக்­கொள்­ளும் நிலை­யில் இருந்து, பல கலா­சா­ரங்­களில் பல்­வேறு வழ­மை­கள் நிலவு­வது ஏன் என்­ப­தைப் புரிந்­து­கொண்டு மற்றவர்களைப் போற்­றும் நிலைக்கு மேம்­பட வேண்டும் என்று கருத்­து­ரைத்­தார்.

ஜாமியா சிங்­கப்­பூ­ரின் மூத்த இயக்­கு­ந­ரும் அர­சி­யல் வல்­லு­நருமான பேரா­சி­ரி­யர் ஹுசேன் முத்­த­ாலிப், சிறு­பான்மை இனத்­த­வ­ரிடையே உள்ள எளி­தில் பாதிக்கப் படுவோரின் உணர்­வு­களைப் புரிந்து­கொண்டு செயல்­படும் வகையில் பெரும்­பான்மை இன மக்­கள் மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!