இளம் சிங்கப்பூரர்களுக்கு $250,000 மானியம்; மனநலம், சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு உதவி

இளம் சிங்கப்பூரர்களுக்கு $250,000 மானியம்; மனநலம், சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு உதவி

2 mins read
1416277f-f085-4934-8d9f-4670c06fec71
-

மன­ந­லம், உயிர் மாய்ப்பு தடுப்பு, சுற்­றுச்­சூ­ழல் நிலைப்­பாடு ஆகிய நற்­ப­ணி­க­ளுக்­கான முயற்­சி­களை முன்­னெ­டுப்­போர், தங்­க­ளு­டைய திட்­டங்­க­ளுக்கு உத­வும் $250,000 மானி­யத்தை இப்­போது பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

அங்­கீ­க­ரிக்­கப்­படும் திட்­டம் ஒவ்­வொன்­றுக்­கும் $1,000 முதல் $3,000 வரை அந்த மானி­யம் கிடைக்­கும். உலக இளம் தலை­வர்­க­ளின் வரு­டாந்­திர உச்­ச­நிலை மாநாடு நேற்று நடந்­தது. அதில் இந்த நிதி உதவி பற்றி அறி­விக்­கப்­பட்­டது.

அந்த மானி­யத்தை 'இன்­னோ­டி­ரக்' என்ற வெளிப்­புற போதனை நிறு­வ­னம் வழங்­கு­கிறது.

சிராங்­கூன் கார்­டன் உயர்­நிலைப்­பள்­ளி­யில் நேற்று நேர­டி­யா­க­வும் இணை­யம் மூல­மா­க­வும் நடந்த அந்த உச்­ச­நிலை மாநாட்­டில் 77 பள்­ளிக்­கூ­டங்­க­ளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் பங்­கெ­டுத்­துக்­கொண்­டார்­கள்.

இந்த மானி­யம் பற்றி மேலும் தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­வும் இதற்கு விண்ணப்பிக்கவும் www.characterleadership.sg/impact-to-the-community என்ற இணை­யத்தளத்தை நாட­லாம்.

கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

தன்­னு­டைய வாழ்க்­கைத்­தொழில் பொருள் பொதிந்­த­தாக இருக்க வேண்­டும் என்று விரும்­பிய துணை அமைச்­சர் கான், தனது இள­மைப் பரு­வத்தில் ராணு­வத்­தில் பாடி­யதை நேற்­றைய நிகழ்ச்­சி­யில் நினை­வு­கூர்ந்­தார்.

"இளைய தலை­வர்­கள் என்ற முறை­யில், முக்­கி­ய­மான அம்­சங்­கள் தொடர்­பில் ஒன்­றா­கச் சேர்ந்து குழு முயற்­சி­க­ளைத் தொடங்கி, கலந்­து­ரை­யா­டல்­களை உரு­வாக்கி, அவற்­றின் மூலம் சமூ­கத்­துக்கு உதவ உங்­கள் ஆற்­ற­லும் நாட்­ட­மும் தேவைப்­ப­டு­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

பெரும் பெரும் சாத­னை­கள் எல்­லாம் தனிப்­பட்ட ஒரு­வ­ரின் சிறு செயல்­களில் இருந்­தே தொடங்கு ­கிறது என்­பதை அவர் சுட்­டி­னார்.