செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
48102c96-271d-412a-8e4d-ff76731c2c33
-

இளையருக்கு உதவும் புதிய மனநலச் சேவை தொடக்கம்

ஷைன் சிறார், இளை­யர் சேவை­கள் என்ற உள்­ளூர் அறப்­பணி அமைப்பின் 'ரிசி­லி­யன்ஸ்' என்ற புதிய இளை­யர் சமூக உத­விக் குழு சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் உரு­வானது. அது நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக 'ஸூம்' செயலி மூலம் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

ஷைன் அமைப்பு, 'எனக்கு மன­நலம்' என்ற ஓர் இயக்­கத்­தை­யும் நேற்று தொடங்­கி­யது.

இளை­யரிடையே மன­ந­லப் பிரச்­சினை­கள் பற்­றிய புரிந்துணர்வை மேம்­ப­டுத்­து­வது குழுவின் நோக்­கம்.

பிரச்சினை­கள் இருப்போரை முன்­ன­தா­கவே கண்­டறிந்து உதவிக்கான வழி­களை ஏற்­படுத்­தித் தரு­வ­தோடு இளை­யரின் மன­ந­ல­னில் பெற்­றோ­ரை­யும் சகாக்­களை­யும் ஈடு­ப­டுத்­த­வும் குழு பாடு­படும்.

அந்த நிகழ்ச்­சி­யில் கலா­சார, சமூக இளை­யர் துறை, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­களுக்கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

"மன­ந­லப் பிரச்­சி­னை­ உள்­ள­வர்­கள் கூச்­சப்­ப­டா­மல் உதவி நாடு­வதை வழ­மை­யா­கக்கொண்ட, எல்­லா­ரை­யும் உள்ளடக்கிய சமூ­கத்தை உரு­வாக்க நாம் விரும்­பு­கி­றோம்," என்று திரு எரிக் சுவா குறிப்பிட்டார்.

மீட்சிப்பாதையில் பொருளியல்; இருந்தாலும் இன்னமும் இடர்கள்

கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தத்தில் இருந்து சிங்கப்பூர் பொருளியல் நல்ல முறையில் மீண்டு வருகிறது என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உலகத் தேவைகள் சூடுபிடிப்பதும் உள்ளுரில் தடுப்பூசி விகிதம் கூடுவதும் சிங்கப்பூரின் பொருளியல் எதிர்பார்க்கப்படுவதைவிட சிறப்பாக மீட்சி அடைய உதவும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.

என்றாலும் இன்னமும் பல இடர்கள் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பணவீக்கமும் மின்னணுப் பொருட்களுக்கான தேவைகள் மெதுவடைவதும் அத்தகைய பாதக அம்சங்களில் அடங்கும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

அதேவேளையில், அடுத்த சில ஆண்டுகளில் பொருளியல் செயல்திறன் பல்வேறு துறைகளிலும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடு கிறார்கள். சிங்கப்பூர் பொருளியல் சென்ற ஆண்டில் 5.4% சுருங்கியது. அது இந்த ஆண்டில் 4% முதல் 6% வரை கூடும் என்று வர்த்தக தொழில் அமைச்சு கணித்துள்ளது.

இந்த ஆண்டு வளர்ச்சி 6.3% முதல் 7.5% வரை இருக்கும் என்று பல பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்து உள்ளனர்.

மூர்க்கமாக நடந்துகொண்ட ஆடவர் கைதானார்

லாவண்டர் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே இருக்கும் ஒரு காப்பிக்கடையில் போலிஸ் அதிகாரிகளை சண்டைக்கு வரும்படி சவால்விட்டதாகக் கூறப்படும் 41 வயது ஆடவர் ஒருவரை போலிசார் மின் அதிர்வு துப்பாக்கியைப் பயன்படுத்தி மடக்கி கைதுசெய்தனர். அந்த ஆடவர் காப்பிக்கடையில் இருந்தவர்களை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தார் என்றும் கூறப்படுகிறது.

அவர், போலிஸ் அதிகாரிகளிடத்திலும் தன்னை சுற்றி இருந்தோரிடமும் மூர்க்கமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களை போலிசார் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தனர். போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வன்செயல் பயன்படுத்தப் படுவதை போலிஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அறிக்கை தெரிவித்தது.