$8.2 மில்லியன் மோசடி; 300 பேரிடம் விசாரணை

பல்­வேறு மோச­டி­களில் சிக்கி பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $8.2 மில்­லி­யனுக்­கும் கூடு­த­லான தொகையை இழந்­ததை அடுத்து, அம்­மோ­ச­டி­களில் தொடர்­பி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரில் முந்­நூற்­றுக்­கும் மேற்­பட்­டோ­ரி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

அந்­தச் சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் 15 முதல் 77 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்­றும் அவர்­களில் 210 பேர் ஆண்­கள், 92 பேர் பெண்­கள் என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

இணை­யக் காதல், இணைய வணி­கம் அர­சாங்க அதி­கா­ரி­கள், சீன அதி­கா­ரி­கள்­போல் ஆள்­மா­றாட்­டம், வேலை, போலி சூதாட்ட இணை­யத்­த­ளம், கடன் போன்ற மோச­டி­கள் தொடர்­பில் வந்­துள்ள 800க்கும் மேற்­பட்ட புகார்­களில் அவர்­க­ளுக்­குத் தொடர்­பி­ருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

"மோச­டி­யில் தொடர்­பு­டை­யோர்க்கு எதி­ரா­கக் காவல்­துறை கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்­கும். குற்­ற­வா­ளி­கள்­மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று காவல்­துறை கூறி­யி­ருக்­கிறது.

இம்­மா­தம் 3ஆம் தேதி­யில் இருந்து 16ஆம் தேதி­வரை வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு அதி­கா­ரி­களும் ஏழு பிரிவுகளின் காவல்­துறை அதி­கா­ரி­களும் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து, அந்­தச் சந்­தே­கப் பேர்­வ­ழி­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஏமாற்று, கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­று­தல் அல்­லது உரி­ம­மின்றி கட்­டண சேவை­களை வழங்கு­தல் போன்­றவை தொடர்­பில் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­படு­கிறது.

குற்­றம் புரிந்­தது மெய்ப்­பிக்­கப்­பட்­டால், குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பத்­தாண்­டு­வரை சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­மம் இல்­லா­மல் சிங்­கப்­பூ­ரில் கட்­டண சேவை­களை வழங்­கும் தொழி­லில் ஈடு­ப­டு­வோர்க்கு $125,000 வரை அப­ரா­தம், மூன்­று ஆண்­டு­வரை சிறை அல்­லது இவ்விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

குற்­றங்­களில் உடந்­தை­யாக இருப்­ப­தைத் தவிர்க்க, தங்­க­ளது வங்­கிக் கணக்­கு­களை அல்­லது கைபேசி எண்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தாக எவ­ரே­னும் அணு­கி­னால் அவர்­க­ளைப் புறக்­க­ணிக்­கும்­படி பொது­மக்­கள் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். குற்­றச்­செ­யல்­களு­டன் அந்த எண்­கள் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்டு இருந்­தால் அதற்கு அவர்­களே பொறுப்­பேற்க வேண்­டி­ இருக்­க­லாம்.

மோச­டி­கள் தொடர்­பில் கூடு­தல் விவ­ரம் அறிய www.scamalert.sg என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம் அல்­லது 1800-722-6688 என்ற நேரடி அழைப்பு எண்­ணைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

இத்­த­கைய மோச­டி­கள் தொடர்­பில் தக­வல் தெரிந்­தால் 1800-255-0000 என்ற எண்­ணில் காவல்­துறை­யைத் தொடர்­பு­கொள்­ள­லாம் அல்­லது www.police.gov.sg/iwitness என்ற இணை­யப்­பக்­கம் வழி­யா­கத் தக­வல் தர­லாம். அனைத்­துத் தக­வல்­களும் ரக­சி­ய­மாக வைக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!