நாடுகடத்தப்படும் பத்துப் பெண்கள்

1 mins read
36695860-11fc-4d55-8291-71752113b66f
-

உணவு, பான நிலையங்கள் என்ற பெயரில் செயல்படும்

27 கேடிவி கூடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை காவல் துறையினர் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது

20 முதல் 47 வயதுக்குட்பட்ட 29 பெண்கள் கைது செய்யப் பட்டனர். அவர்களில் 'விரும்பத் தகாத குடியேறிகள்' என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தால் கருதப்படும், 21 முதல் 35 வயதுக்குட்பட்ட பத்துப் பேர் நாடு கடத்தப்படுவர். அவர்களின் குறுகியகால விசா அனுமதியும் வேலை அனுமதி அட்டைகளும் ரத்து செய்யப் பட்டுவிட்டன. இம்மாதம் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட மேலும் பத்துப் பெண்களிடம் விசாரணை நடந்து வருகிறது.