'ஹின் லியோங் டிரேடிங்' நிறுவனத்தைத் தோற்றுவித்த திரு லிம் ஊன் குய்னுக்குச் சொந்தமான, புக்கிட் தீமா 2வது அவென்யூவில் உள்ள முற்றுரிமையுடன் கூடிய 'குட் கிளாஸ் பங்களா'விற்கு $28.5 மில்லியன் விலை பேசப்பட்டு இருக்கிறது. திரு லிம்மின் எண்ணெய் வணிகம் வீழ்ச்சி கண்டதை அடுத்து, அவரிடம் இருந்து $4.75 பில்லியன் கடன் தொகையை வசூலிக்கும் விதமாக, புக்கிட் தீமா பங்களா உட்பட சிங்கப்பூரிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள அவருக்குச் சொந்தமான ஒன்பது சொத்துகளை நீதி மன்றம் முடக்கி வைத்துள்ளது.
$28.5 மில்லியனுக்கு பங்களா விற்பனை
1 mins read
-

