அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பலர் கொலை

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் பலர் கொலை

1 mins read
db15772c-a1f7-4c3a-94d7-3583f3668cf1
-

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை இரவும் சனிக்கிழமை அதிகாலையும் தனித்தியாக நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஹியூஸ்டன், பிலடெல்பியா, பார்ட்லந்து, ஒரீகன், சேக்ரமெண்டோ, கலிஃபோர்னியா, வாஷிங்டன் டிசி ஆகிய இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடுகள், துப்பாக்கி விற்பனைகளின் அதிகரிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தன.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில், குற்றத்தடுப்புக்காக கூடுதல் அதிகாரிகளைப் பயன்படுத்தும்படி பைடன் திங்கட்கிழமை தெரிவித்தார். "ஜனநாயகத்தின் முதல் பணியான மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்பதை நாங்கள் அறிகிறோம்," என்று திரு பைடன் கூறினார்.

வாஷிங்டன் டி.சி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் 6 வயது சிறுமி கொல்லப்பட்டார். இதே தாக்குதலில் மூன்று ஆடவர்களும் மூன்று பெண்களும் காயமடைந்ததாக போலிசார் தெரிவித்தனர்.