'பணம் இருந்தாலே மகிழ்ச்சி இருக்கும் என சொல்ல முடியாது'

'பணம் இருந்தாலே மகிழ்ச்சி இருக்கும் என சொல்ல முடியாது'

1 mins read
fae7496b-2755-4e62-93c8-914e7d745455
-

அதிக வருமானம் ஈட்டுவோரில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மற்ற பிரிவினரைவிடக் குறைவு என்று கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய அண்மைய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவருகிறது. 2019 நவம்பருக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் 2,000 பேரை உள்ளடக்கி அந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறும் மக்களின் விகிதாச்சாரம், அதிக வருமானப் பிரிவினரிடத்தில் ஆகக் குறைவாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.

எடுத்துக்காட்டாக, மாதம் $5,000 முதல் $6,999 வரை ஈட்டுவோரில் 18 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். $7,000 அல்லது அதற்கும் அதிகம் ஈட்டுவோரில் இந்த விகிதாச்சாரம் 22 விழுக்காடாக இருக்கிறது.

ஒப்பிட்டுப் பார்க்கையில், மாதம் $3,000 முதல் $4,999 வரை சம்பாதிப்பவர்களில் 23 விழுக்காட்டினர் தாங்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

$1,500 முதல் $2,999 வரை ஈட்டுவோரில் இந்த விகிதாச்சாரம் ஏறத்தாழ 26 விழுக்காடாக இருக்கிறது. அதேவேளையில், மாதம் $1,500 கூட சம்பாதிக்காத மக்களில் 30 விழுக்காட்டினர் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

பணம் இருந்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் என்பது நிச்சயம் அல்ல என ஆய்வு கூறுகிறது.