தொழில்துறை நல்லுறவிற்கு சிறந்த அணுகுமுறை சமரசம்

தொழில்துறை நல்லுறவிற்கு சிறந்த அணுகுமுறை சமரசம்

2 mins read
299169a4-71c0-4481-a18a-b031c6a2e4a8
-

சிங்கப்பூர்-இந்தியா சமரச உச்சநிலை மாநாட்டில் அமைச்சர் எட்வின் டோங் விளக்கம்

தொழில்­துறை சச்­ச­ர­வு­க­ளுக்­குச் சம­ரச அணுகுமுறை மூலம் உடன்­பாடு காண்­பதே நல்ல முதல் காரியம் என்று இரண்­டாம் சட்ட அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­தார். இருந்­தா­லும் சம்­பந்­தப்­பட்ட தரப்பு சொன்­ன­தைச் செய்­யாமல் போய்­வி­ட­லாம் என்று பலர் கவலைப்­பட அதில் இடமுள்ளதாக அவர் கூறி­னார்.

ஆகை­யால் சச்­ச­ர­வு­க­ளுக்­கு சம­ர­சம் மூலம் எட்­டப்­படும் தீர்வை இரு தரப்­பு­களும் மீற­ாது என்­ப­தற்­கான உத்­த­ர­வா­தம் அதில் இடம்­பெற வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று அவர் குறிப்­பிட்­டார்.

கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சருமான திரு டோங், இந்­தியா-சிங்­கப்­பூர் முத­லா­வது சம­ரச உச்சநிலை மாநாட்­டில் சனிக்­கி­ழமை உரையாற்­றி­னார். அந்த மாநாடு கொவிட்-19 கார­ண­மாக இணை­யம் வழி நடந்­தது.

அதில் இந்­தி­யா­வின் தலைமை நீதி­பதி என்.வி. ரமணா, சிங்­கப்­பூரின் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் இரு­வ­ரும் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பேசினர். கேள்வி பதில் அங்­க­மும் இடம்பெற்­றது.

சம­ரச ஏற்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் மேலும் ஒன்றா­கச் சேர்ந்து செயல்­பட வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

சம­ரச அணு­கு­முறை என்­பது பொது­வாக வேகமாகத் தீர்வு ஏற்பட வழி வகுக்­கும். இது செலவு குறைந்த அணு­கு­முறை.

சிங்­கப்­பூ­ரர்­கள்-இந்­தி­யர்­கள் நடத்­தும் நிறு­வ­னங்­களுக்கு இடையில் அது நன்கு பிர­ப­ல­மா­ன­தா­க­வும் இருக்­கிறது என்று திரு டோங் கூறி­னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அனைத்­து­லக வர்த்­தக சச்சரவு­ க­ளுக்­குச் சம­ரச அணு­கு­முறை மூலம் ஏற்­பட்ட தீர்வு நடப்புக்கு வருவதை 'சிங்­கப்­பூர் சம­ரச உடன்­பாடு' என்ற ஓர் ஏற்­பாடு உறு­திப்­படுத்­து­வ­தாக அமைச்­சர் தெரி வித்தார்.

இந்த உடன்­பாடு, ஐநா அனைத்­து­லக வர்த்­தக சச்­ச­ரவு தீர்வு ஏற்­பா­டா­கும். அது சென்ற ஆண்டு நடப்­புக்கு வந்­தது. அதில் 54 நாடு­கள் கையெ­ழுத்­திட்டு உள்­ளன. அதை ஆறு நாடு­கள் நடைமுறைப் படுத்தி உள்ளன.

சம­ரச அணு­கு­முறை என்­பது சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­கள், நடு­வர் ஒரு­வ­ரின் தீர்ப்பு இல்­லா­மல் தாங்­களா­கவே ஒரு தீர்வை எட்­டும் அணுகுமுறையாகும்.

சிங்­கப்­பூர் சம­ரச உடன்­பாடு இல்லை எனில் ஒரு நாட்­டில் ஏற்­படுத்­தப்­பட்ட இணக்­கத்தை வேறு ஒரு நாட்­டில் அமல்­ப­டுத்த சட்­ட­பூர்வ வழி இல்­லா­மல் போய்­வி­டும்.

அதா­வது மற்­றொரு நாட்­டில் அந்த தீர்வை நடப்­புக்­குக் கொண்டு வர விரும்­பும் தரப்பு அதற்­காக நீதி­மன்­றத்தை நாட வேண்­டிய நிலை ஏற்­படும்.

மாநாட்­டில் பேசிய தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன், சிங்­கப்­பூர் சம­ரச உடன்­பாடு, நியூ­யார்க் உடன்­பாட்­டைப்­போல் செல்­வாக்கு மிக்­க­தாக ஆகி பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்று தான் நம்­புவ­தா­கத் தெரி­வித்­தார்.