சொத்துத் துறை பெரும் நிறுவனமான கேப்பிட்ட லேண்ட் சீரமைப்புத் திட்டம் நியாயமானதாக இருக்கும் என்று சுயேட்சையான நிதி ஆலோசனை நிறுவனம் ஒரு கடிதத்தில் தெரிவித்து இருக்கிறது.
ஆகையால் பங்குதாரர்கள் அடுத்த மாதம் திட்ட மிடப்பட்டு உள்ள வாக்களிப்பில் மூலதனக் குறைப்பு நடவடிக்கைக்கும் ஏற்பாட்டு இணக்கத் திட்டம் ஒன்றுக்கும் பச்சைக் கொடி காட்டலாம் என்று அந்த நிறுவனத்தின் சுயேட்சையான இயக்குநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கேப்பிட்டலேண்ட் நிறுவனம் மார்ச் மாதம் தனது உத்தேச சீரமைப்புத் திட்டத்தை வெளியிட்டது.
அந்த உத்தேச திட்டத்தின்படி அந்த நிறுவனத்தின் தொழில்கள் இரண்டாகப் பிரிக்கப்படும்.
ஒன்று தனியார் வசம் இருந்து செயல்படும் நிலச்சொத்து மேம்பாட்டு நிறுவனமாக இருக்கும்.
மற்றொன்று புதிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதலீட்டு நிர்வாகத் தளங்களாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

