ஜூரோங் மீன்பிடி வர்த்தகத் துறைமுகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளதென்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார். அதனையொட்டி சினோக்கோ மீன்பிடி வர்த்தகத் துறைமுகத்தைச் செயல்படச் செய்துள்ளதாக டாகூர் லேனில் உள்ள ஃபேர்பிரைஸ் உணவு விநியோக நிலையத்திலற்குச் சென்றபோது அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து அதிக அளவில் விநியோகம் செய்ய முழு விற்பனையாளர் கூடுதல் மீன்களை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முக்கியமான பேரங்காடிகளில் கூடுதல் எண்ணிக்கையில் மீன்கள் விற்கப்படும் என்றும் அமைச்சர் ஃபூ சொன்னார். விற்பனையில் எவ்வித இடையூறும் வராது என்றும் கடைகளில் போதுமான மீன்கள் இல்லாமல் போகாது என்றும் அவர் சுட்டினார்.
மீன் விநியோகத்திற்கான மாற்று ஏற்பாடுகள் தயார்: அமைச்சர் கிரேஸ் ஃபூ
1 mins read
ஃபேர்பிரைஸ் உணவு விநியோக நிலையத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. படம்: சாவ் பாவ் -

