பிள்ளைகளின் கல்வி பாதிப்படையாமல் அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வைக்க பெற்றோர் சில உத்திகளைக் கையாள்கின்றனர்.
பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தினம் அவர்களின் கல்வி அல்லது தேர்வு நேரத்திற்கு இடையூறாக இல்லாமல் இருக்கச் சில பெற்றோர் கால அட்டவணையைத் தயார்செய்கின்றனர்.
உதாரணமாக, தடுப்பூசி போடப்பட்ட பிறகு அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில் பிள்ளைகளுக்கு முக்கியமான நடநடிக்கை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் இல்லத்தரசியான 49 வயது ஷெர்லி சியா.
முக்கியமான தேர்வுகளை எழுதும் பிள்ளைகளுக்கு எப்போது தடுப்பூசி போடுவது என்பதை முடிவு செய்வது சில பெற்றோருக்குப் பெரிய சவாலாக உள்ளது.
ஜேனிஸ் எனத் தன்னை அழைக்கச் சொல்லும் 44 வயது இல்லத்தரசிக்குத் தொடக்கப் பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதவிருக்கும் ஒரு பிள்ளையும் பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வை எழுதும் ஒரு பிள்ளையும் இருக்கின்றனர்.
தொடக்கப் பள்ளி இறுதியாண்டு த் தேர்வை எழுதவிருக்கும் பிள்ளைக்கு விரைவில் 12 வயதாகிவிடும். அதற்குப் பிறகு அவருக்குத் தடுப்பூசி போடலாம்.
மற்றொரு பிள்ளை பொதுக் கல்விச் சான்றிதழ் தேர்வுக்கு மும்முரமாகத் தயார்செய்து வருவதால் அவருக்கான தடுப்பூசி போடும் தினத்தை திருவாட்டி ஜேனிஸ் ஒத்திவைத்திவைத்துள்ளார்.

