முடுக்கிவிடப்படும் கட்டுப்பாடுகள்: உணவு, பானத் துறையினரிடையே அதிருப்தி

முடுக்கிவிடப்படும் கட்டுப்பாடுகள்: உணவு, பானத் துறையினரிடையே அதிருப்தி

1 mins read
b2b42ff1-5aa1-40e6-aa83-6451015613f1
-

தளர்த்­தப்­பட்ட வேகத்­தி­லேயே கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­கள் முடுக்­கி­வி­டப்­ப­டு­வ­தைத் தொடர்ந்து சில உணவு, பானத் துறை வர்த்­த­கர்­கள் வருத்­தம் தெரி­வித்­துள்­ள­னர். கடந்த வாரம் திங்­கட்­கி­ழ­மை­யன்று கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டன.

ஆனால், கேடிவி கேளிக்கை இசைக் கூடங்­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் பெரிய அள­வில் இடம்­பெற்­றி­ருப்­ப­தை­யொட்டி இன்று முதல் கட்­டுப்­பா­டு­கள் முடுக்­கி­வி­டப்­ப­டு­கின்­றன.

இன்று முதல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் ஒரு வேளை­யில் மேலும் ஒரு­வ­ரு­டன் மட்­டும்­தான் உண­வ­கங்­களில் உண­வ­ருந்­த­லாம்.

உண­வங்­கா­டி­கள், காப்­பிக் கடை­கள் ஆகி­ய­வற்­றில் அந்த சலு­கை­யும் கிடை­யாது, ஒரு நேரத்­தில் இரு­வ­ருக்கு மேல் அங்கே உண­வ­ருந்த முடி­யாது. ஏற்­கெனவே கேடிவி இசைக் கூடங்­க­ளின் அலட்­சி­யப் போக்கு, நிலை­மை­யைச் சமா­ளிக்­கத் தாங்­கள் எடுத்த முயற்­சி­களை எடு­ப­டா­மல் இருக்­கச் செய்­த­தா­க­வும், இப்­போது நில­வ­ரம் மேலும் மோச­ம­டைந்­துள்­ள­தா­க­வும் சில உண­வ­கங்­கள் கருத்­து­ரைத்­தன.

இத­னால் உணவு, பானத் துறை­யில் பணி­பு­ரி­யும் நூறா­யி­ரக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று அவை வருத்­தம் தெரி­வித்­தன.

நிலை­மை­யைச் சமா­ளிக்­கக் கூடு­தல் உதவி வழங்­கு­மா­றும் சில வர்த்­த­கர்­கள் அர­சாங்­கத்­தி­டம் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.