இளையரின் மனநலன்: நீண்டகால பாதிப்பு அபாயம்

இளையரின் மனநலன்: நீண்டகால பாதிப்பு அபாயம்

2 mins read
36ff5ed1-6c0f-4b76-b569-215ded2ee416
-

கொவிட்-19 கிரு­மிப்­ ப­ர­வ­ல் இளையர்கள், சிறுவர்களின் மனநலனைப் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் யுனிசெஃப் உள்ளிட்ட பல அனைத்துலக அமைப்புகள் எச்சரித்துள்ளன. கிருமிப் பரவலால் ஒரு கூட்டுக்குள் அடைபட்டது போன்ற உணர்வு நீடித்தால் அதன் பாதிப்பு பல்லாண்டுகள் தொடரும் என்கிறது ஓர் அண்மைய ஆய்வு.

கொவிட்-19 கிரு­மிப் ­ப­ர­வ­லால் இளை­யர்­கள், சிறு­வர்­கள் ஆகி­யோ­ரின் மன­ந­லம் மீது நீண்­ட­கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது. கிரு­மிப் ­ப­ர­வ­லின் தாக்­கத்­தால் இவர்­க­ளது மன­ந­லம் தொடர்ந்து நீண்­ட­கா­லத்­திற்கு மேலும் பாதிக்­கப்­பட்­ட­தாக 29 நாடு­களில் பத்­தில் நால்­வர் நினைப்­ப­தாக இப்­ஸோ­ஸின் புதிய அனைத்­து­லக ஆய்வு குறிப்­பி­டு­கிறது. இப்­ஸோஸ் ஆய்வு, ஆலோ­ச­னை­களை மேற்­கொள்­ளும் உலக அள­வி­லான நிறு­வ­னம் ஆகும்.

உலக இளை­யர் திறன்­கள் தினத்தை ஒட்டிய கருத்­துக்­க­ணிப்பு அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டது. கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் பிள்­ளை­க­ளின் கல்வி, மன­ந­லன் மற்­றும் திறன் மேம்­பாட்­டின் மீதான தாக்­கம் ஆகி­யவை பற்றி 29 நாடு­க­ளைச் சேர்ந்த 16 வய­துக்­கும் 74 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் கருத்­துக்­க­ணிப்­பில் தெரிவித்தனர்.

பள்­ளிப் ­பா­டங்­களில் கவ­னத்­தைக் கட்­டிக்­காப்­பது, வகுப்­ப­றை­க­ளுக்கு மீண்­டும் திரும்­பும் இளை­யர்­களை அதி­கம் பாதிக்­கக்­கூ­டிய விவ­கா­ரம் என்று ஆய்வில் கலந்து­கொண்ட பல­ரும் கூறி­னர்.

சரா­ச­ரி­யாக 17 வயது வரை­யி­லான மாண­வர்­கள் பள்­ளி­க­ளுக்­குத் திரும்­பும்­போது பாடங்­களில் கவ­னம் செலுத்­து­

வ­தில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வர் என்று பத்­தில் நான்கு பேர் நினைத்­த­னர். பள்­ளிச் சூழ­லு­டன் ஒத்­துப்­போ­வது, சக மாண­வர்­க­ளோ­டும் ஆசி­ரி­யர்­க­ளோ­டும் மீண்­டும் கலந்துறவாடுவது ஆகி­யவை 11 வய­துக்கு குறை­வான மாண­வர்­க­ளுக்­குப் பெரும் சவாலாக இருக்­கும் என மூன்­றில் ஒரு பங்­கி­னர் கரு­தி­னர்.

இருந்­த­போ­தும், கிரு­மிப்­ ப­ர­வ­லால் சில நன்­மை­கள் விளைந்­தி­ருப்­ப­தாக சிலர் கருது­வ­தாக கருத்­தாய்வு குறிப்­பி­டு­கிறது.

குறிப்­பாக, கிரு­மிப் ­ப­ர­வ­லால் இளை­யர் களி­டையே மின்­னி­லக்­கத் தொடர்­பு­

மு­றை­கள் மேம்­படும் என்று சிங்­கப்­பூ­ரில் ஐவ­ரில் இரு­வர் எண்­ணு­கின்­ற­னர். இப்­படி எண்­ணு­வோ­ரின் விகி­தம் உல­க­ள­வில் ஐவ­ரில் ஒரு­வ­ராக உள்­ளது.

உட­லில் ஏற்­படும் உபா­தை­க­ளுக்கு முத­லு­தவி தேவைப்­ப­டு­வது போல பள்­ளி­களில் மனநலத்­திற்­கும் உதவி தேவைப்­ப­டு­வ­தாக 'மெண்­டல் ஆக்ட்' எனும் மன­நல ஆர்­வலர் அமைப்­பின் நிறு­வ­ன­ரும் சமூக ஊழி­ய­ரு­மான டி. தேவானந்தன் தெரி­வித்­தார்.

"முத­லு­தவி பயிற்­சிக்­குச் செல்ல விரும்­பும் இளை­யர்­கள் தங்­க­ளது பள்­ளியை அணு­க­லாம். மன அழுத்­தம், பதற்­றம் போன்­ற­வற்­றால் அவ­திப்­படும் சக இளை­யர்­களை சில அறி­கு­றி­க­ளின் வழி­யாக கண்­டு­பி­டித்து பள்­ளி­யின் மன­நல ஆலோ­ச­கர்­களை அணு­கும்­படி பரிந்­து­ரைக்­க­லாம்," என்று அவர் கூறி­னார்.

விடு­முறை முடிந்து வரும் மாண­வர்­கள், தங்­களை மேலும் நன்கு பரா­ம­ரிப்­பது எப்­படி போன்றவை குறித்த உத்­தி­க­ளைக் கற்­க­லாம். இதற்கு துணை செய்­யும் வகை­யில் பள்­ளி­கள் உரிய பயி­ல­ரங்­கு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­ய­லாம் என்­றும் திரு தேவன் கூறி­னார்.

- கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்