விலங்குகளிடையே மட்டும் பரவக்கூடிய முயல் குருதிக்கசிவு நோய்( ஆர் எச் டி) சிங்கப்பூரில் கடந்த ஆண்டின் பிற்பகுதியின்போது தனியார் விலங்கு மருத்துவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இறுக்கமான தோற்ற அமைவு, மந்தம், ஜுரம் போன்ற அறிகுறிகளைக் கண்ட அந்த மருத்துவர், அதன் தொடர்பில் தேசிய பூங்காக் கழகத்திடம் தெரிவித்தார்.
பல்வேறு சாதாரண நோய்களுக்காக அந்த முயல்கள் சோதிக்கப்பட்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விலங்கு, விலங்கு மருத்துவ அறிவியலுக்கான இயக்குநர் டாக்டர் சார்லீன் ஜுதித் ஃபெர்னாண்டர்ஸ் தெரிவித்தார். கல்லீரல் மாதிரிகள் சிலவற்றைச் சேகரித்து பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் அந்த முயல்களுக்கு ஆர்எச்டி இருந்தது கண்டறிப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தக் கிருமி சிங்கப்பூரில் இதுவரை காணப்படவில்லை.

