ஈரச்சந்தைகளில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேலும் கடுமைப்படுத்தப்படும்.
இன்று முதல் ஈரச்சந்தைகளில் தற்காலிக வேலிகளை அமைக்க.தேசிய சுற்றுப்புற வாரியம் மற்றும் நகர மன்றங்கள் செயல்படுகின்றன. 'சேஃப்- என்ட்ரீ' முறை நடப்பில் இருப்பது மேலும் உறுதிசெய்யப்படுமென்று சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்தக் கடுமையான கட்டுப்பாடு, தொடர்புத் தடங்களை அறிய மேலும் வகை செய்யும் என்று அமைச்சு தெரிவித்தது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் கடந்தாண்டு முதல் நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டத்தின்போது செயல்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்கள் இந்தச் சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

