‘நாட்டை பாதுகாக்க உதவிய முஸ்லிம்களின் தியாகம்; சமூகப் பொறுப்பு தொடர வேண்டும்’

கொவிட்-19 பரவல் இங்கு தொடங்கியதிலிருந்து இங்குள்ள முஸ்லிம் சமூகம் தன்னையும் மற்ற சிங்கப்பூர் சமூகத்தில் உள்ள மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முக்கிய தியாகங்களையும் நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றங்களையும் செய்திருப்பதாக இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கூறியுள்ளது.

முஸ்லிம்கள் தங்கள் அன்புக்குரியவர்கள், குறிப்பாக முதியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அத்தகைய சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து நடந்துகொள்வது முக்கியம் என்றது முயிஸ். இன்று ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முயிஸ் நேற்று வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் அதனைத் தெரிவித்தது.

அண்மை நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ள பரவலால் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய முயிஸ், கிருமி தொற்று ஆபத்து அதிகமுள்ளவர்கள், குறிப்பாக முதியவர்களை அடுத்த சில நாட்களில் முடிந்தவரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹுஜ்ஜு பெருநாள், நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களைப் பெருமளவு குறைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகம் பொறுப்புடன் செயல்படட்டதை முயிஸ் குறிப்பிட்டது. இது, சமய நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய தொற்றின் அபாயத்தைக் குறைக்க உதவியுள்ளதாக முயிஸ் கூறியது. இன்று காலையில் இங்குள்ள பள்ளிவாசல்களில் நடக்கும் ஹஜ்ஜு பெருநாள் சிறப்புத் தொழுகைகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் நடப்பில் உள்ளன.

ஹஜ்ஜு பெருநாளில் வழக்கமாக பள்ளிவாசல்களில் ஆடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி பகிர்ந்தளிக்கப்படும் குர்பான் சடங்கு சிங்கப்பூரில் இரண்டாவது ஆண்டாக நடைபெறவில்லை.

இவ்வேளையில், ஹஜ்ஜு பயணத்தை தங்கள் வாழ்நாளில் ஒருமுறை பல சிங்கப்பூர் முஸ்லிம்கள் குறிப்பாக வயதானவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக ஹஜ்ஜு பயணத்தை மேற்கொள்ள முடியாதது வேதனை அளித்துள்ளதை அதிபர் ஹலிமா சுட்டியுள்ளார். அது பாதுகாப்பு, சுகாதார காரணங்களுக்காக என்று புரிந்தபோதும் அது வலிமிகுந்த ஒன்று என்றார் அவர்.

வெள்ளிக்கிழமை, பெருநாள் தொழுகையில் கட்டுப்பாடுகளை எதிர்நோக்கிய முஸ்லிம்கள், கடினமாக இருப்பினும் அவர்கள் அமைதியாக அக்கட்டுப்பாடுகளின் நடந்தது மெச்சத்தக்கது என்று அதிபர் ஹலிமா நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!