பெண்கள் இருவர் குளிப்பதைப் படம்பிடித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்க்குப் பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாமாண்டில் பயிலும் ஜோனத்தன் அங்கா தர்மவான் ஜீ, 25, என்ற அம்மாணவர், ஒரு பெண்ணின் மானத்திற்கு இழுக்கு விளைவித்ததை கடந்த மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இப்போது அம்மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.
கடந்த 2019 ஆகஸ்ட் 28ஆம் தேதி ஜோனத்தன், 25 மற்றும் 22 வயதான அப்பெண்கள் இருவரும் குளித்ததைத் தமது கைபேசி கொண்டு படம் பிடித்ததாகச் சொல்லப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதேபோன்ற குற்றம் நிகழ்ந்தது தெரிந்திருந்தும் ஜோனத்தன் அவ்வாறு நடந்து கொண்டதாக நீதிபதி சர்மிளா குறிப்பிட்டார். ஜோனத்தன் தமது சிறைவாசத்தை இன்றில் இருந்தே தொடங்கிவிட்டார்.

