பள்ளிகளில் நடவடிக்கை

பள்ளிகளில் நடவடிக்கை

1 mins read
5e8eb66c-efc6-4640-a779-fb4323ad65af
-

ராஃபிள்ஸ் கல்­வி ­நி­லை­யத்­தில் உயர்­நிலை ஒன்­றி­லி­ருந்து நான்கு வரை­யில் படிக்­கும் மாண­வர்­கள் நேற்று வீட்­டி­லி­ருந்து பாடம் கற்­கும் நடை­மு­றைக்கு மாறி­னர்.

பள்ளிச் சிற்­றுண்டியகத்தில் பணி­யாற்­றும் கடை உத­வி­யா­ள­ருக்கு கடந்த சனிக்­கி­ழமை தொற்று உறு­தி­யா­ன­தைத் தொடர்ந்து அந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

நேற்று பள்ளிச் சிற்­றுண்டி யகத்தைச் சுத்­தப்­ப­டுத்தி அங்கு கிருமி நாசினி தெளிக்­கும் பணி­கள் நடந்­தன. பள்ளி நிர்­வா­கம் அது­கு­றித்து பெற்­றோ­ருக்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கடி­தம் அனுப்­பி­யது.

இவ்­வே­ளை­யில் யாங்­ஸெங் தொடக்­கப்­பள்­ளி­யில் தொடக்­க­நிலை இரண்­டில் படிக்­கும் மாண­வ­ருக்கு தொற்று உறு­தி­யா­ன­தால், அப்­பள்­ளி­யில் உள்ள தொடக்­க­நிலை இரண்டு மாண­வர்­கள் நேற்று வீட்­டி­லி­ருந்து கற்­கும் முறைக்கு மாறி­னர். வரும் புதன்­கி­ழமை வரை அவர்­கள் வீட்­டில் இருந்­த­படி பாடம் கற்­பார்­கள்.

அந்த மாண­வர் கடை­சி­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை பள்­ளிக்­குச் சென்­றி­ருந்­தார்.

அண்மை நாட்­களில் தொற்று அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக உட­லு­றுதி விளை­யாட்­டு­கள், நட­னம் ஆகி­யவை தொடர்­பான இணைப்­பாட நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்­ளும் நபர்­க­ளின் எண்­ணிக்கை 50லிருந்து 30க்குக் குறைக்­கப்­பட்­டது.

குழுக்­க­ளிள் அள­வும் ஐந்­தி­லி­ருந்து இரண்­டா­கக் குறைக்­கப்­படும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கல்வி அமைச்சு கூறி­யது. புதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நேற்று நடப்­புக்கு வந்ததாகக் கூறப்பட்டது.