'நாட்டை பாதுகாக்க உதவிய முஸ்லிம்களின் தியாகம்'

'நாட்டை பாதுகாக்க உதவிய முஸ்லிம்களின் தியாகம்'

2 mins read
575df7e6-5a4b-4f3a-b4da-2ad4d41d84be
-

கொவிட்-19 பர­வல் இங்கு தொடங்­கி­ய­தி­லி­ருந்து இங்­குள்ள முஸ்­லிம் சமூ­கம் தன்­னை­யும் மற்ற சிங்­கப்­பூர் சமூ­கத்­தில் உள்ள மற்­ற­வர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க முக்­கிய தியா­கங் களை­யும் நிலை­மைக்கு ஏற்­ற­வாறு மாற்­றங்­க­ளை­யும் செய்­தி­ருப்­ப­தாக சிங்­கப்­இ­பூர் ஸ்லா­மிய சமய மன்­றம் (முயிஸ்) கூறி­யுள்­ளது.

முஸ்­லிம்­கள் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­கள், குறிப்­பாக முதி­ய­வர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க அத்­த­கைய சமூ­கப் பொறுப்­பு­டன் தொடர்ந்து நடந்­து­கொள்­வது முக்­கி­யம் என்­றது முயிஸ். இன்று ஹஜ்­ஜுப் பெரு­நாள் கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு முயிஸ் நேற்று வெளி­யிட்ட ஆலோ­சனை அறிக்­கை­யில் அத­னைத் தெரி­வித்­தது.

அண்மை நாட்­களில் மீண்­டும் அதி­க­ரித்­துள்ள பர­வ­லால் புதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்­டிய முயிஸ், கிரு­மித்­தொற்று ஆபத்து அதி­க­முள்­ள­வர்­கள், குறிப்­பாக முதி­ய­வர்­களை அடுத்த சில நாட்­களுக்கு முடிந்­த­வரை வீட்­டில் இருக்­கும்­படி கேட்­டுக்­கொண்­டது.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக ஹுஜ்­ஜுப் பெரு­நாள், நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­க­ளைப் பெரு­ம­ளவு குறைத்­துக்­கொண்டு, முஸ்­லிம் சமூ­கம் பொறுப்­பு­டன் செயல்­பட்­டதை முயிஸ் குறிப்­பிட்­டது. இது, சமய நட­வ­டிக்கை களால் ஏற்­ப­டக்­கூ­டிய தொற்­றின் அபா­யத்­தைக் குறைக்க உத­வி­யுள்­ள­தாக முயிஸ் கூறி­யது.

இதற்­கி­டையே, கொவிட்-19 பல­ரது, குறிப்­பாக சிங்­கப்­பூர் முஸ்­லிம்­கள் பல­ரது வாழ்க்­கை­யைப் பாதித்­துள்­ளது. அவர்­கள் இஸ்­லாத்­தின் முக்­கிய கட­மை­களில் ஒன்­றான ஹஜ்­ஜுப் பய­ணத்தை நிறை­வேற்ற முடி­ய­வில்லை என்று கவலை கொண்­டுள்­ள­னர். அது­வும் இரண்டு ஆண்­டு­க­ளாக," என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் தெரி­வத்­தார்.

வெள்­ளிக்­கி­ழமை, பெரு­நாள் தொழு­கை­யில் கட்­டுப்­பா­டு­களை எதிர்­நோக்­கிய முஸ்­லிம்­கள், கடி­ன­மாக இருப்­பி­னும் அவர்­கள் அமை­தி­யாக அக்­கட்­டுப்­பா­டு­க­ளின் நடந்­தது மெச்­சத்­தக்­கது என்று அதி­பர் ஹலிமா நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கூறி­னார்.