நோய்ப் பரவல் சூழலில் பாதுகாப்பான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

நோய்ப் பரவல் சூழலில் பாதுகாப்பான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்

4 mins read
20e7261c-76eb-4861-9d38-968d40773d1b
-

இர்­‌‌‌‌‌ஷாத் முஹம்­மது

முஸ்கலிம்களின் இரு­பெ­ரும் விழாக்­க­ளின் ஒன்­றான ஹஜ்­ஜுப் பெரு­நாள் இன்று சிங்­கப்­பூ­ரில் கொண்­டா­டப்­ப­டு­கிறது. கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் அதி­க­ரித்து வரும் சமூ­கப் பர­வல் சம்­ப­வங்­க­ளுக்கு மத்­தி­யில் பாது­காப்­பான முறை­யில் ஹஜ்­ஜுப் பெரு­நாள் தொழு­கை­கள் சிங்­கப்­பூர் முழு­வ­தும் உள்ள பள்­ளி­வா­சல்­களில் இன்று காலை நடக்­கின்­றன.

மொத்­தம் 66 பள்­ளி­வா­சல்­களில் 18,180 தொழுகை இடங்­க­ளுக்­கான முன்­ப­திவு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்­கி­யது. முன்­ப­திவு செய்து கொண்­டோர் மட்­டுமே இன்­றைய ஹஜ்­ஜுப் பெரு­நாள் தொழு­கை­களில் கலந்­து­கொள்­ள­மு­டி­யும்.

இவ்­வாண்­டின் தொழு­கைக்­கான பதிவு, தொடங்­கிய சில நிமி­டங்­களில் அனைத்து இடங்­களும் பதிவு செய்­யப்­பட்டு விட்­டன.

"இது எதிர்­பார்த்­த­து­தான். ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழமை தொழு­கைக்­கும் நாங்­கள் இவ்­வாறு பதிவு செய்­கி­றோம். பெரு­நாள் என்­றால் இன்­னும் ஏரா­ள­மானோர் பதிவு செய்­வார்­கள். நோன்­புப் பெரு­நாள் தொழு­கைக்­குப் பதிவு செய்­த­போது பல தொழில்­நுட்­பக் கோளா­று­கள் ஏற்­பட்­டன. இம்­முறை சுமூ­க­மாக, எளி­மை­யான முறை­யில் பதிவு வலைத்­த­ளம் அமைந்­தது வர­வேற்­கத்­தக்­கது," என்­றார் வர்த்­த­கர் ப‌ஷீர் அஹ­மது.

காலை 7.30 மணி முதல் 8.10 மணி முதல் தொழுகை, காலை 8.40 மணி முதல் 9.20 மணி வரை இரண்­டா­வது தொழுகை, காலை 9.50 மணி முதல் 10.30 மணி வரை மூன்­றா­வது தொழுகை என பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் மூன்று முறை தொழுகை நடத்­தப்­ப­டு­கிறது.

தொழுகை நடக்­கும் பள்­ளி­வா­சல்­கள் இரு வகை­யா­கப் பிரிக்­கப்­பட்­டன. 47 பள்­ளி­வா­சல்­களில் ஒரே ஒரு தொழு­கைக் கூடம், அதில் 50 பேர் தொழ­லாம்.

'மேலும் பாது­காப்­பான பள்­ளி­வா­சல்­கள்' என அடை­யா­ளம் காணப்­பட்ட மீத­முள்ள 19 பள்­ளி­வா­சல்­களில் 3 முதல் 5 'ஸோன்' தொழு­கைக் கூடங்­கள் அமைக்­கப்­பட்டு வசதி செய்­யப்பட்­டுள்­ளது.

அந்த 'மேலும் பாது­காப்­பான' பள்­ளி­வா­சல்­க­ளுக்­குச் செல்­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூ­சிப் போடப்­பட்டு இரு வாரங்­கள் கடந்­தி­ருக்­க­வேண்­டும். இல்லை என்­றால் நிகழ்­வுக்கு முந்­தைய கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். அல்­லது கடந்த 270 நாட்­களில் அவர்­க­ளுக்­குக் கொவிட்-19 கிரு­மித்தொற்று ஏற்­பட்டு குண­ம­டைந்­தி­ருக்­க­வேண்­டும். இத்­த­கைய நிபந்­த­னை­களை நிறை­வேற்­றி­ய­வர்­களே தொழுகை மேற்­கொள்ள அந்­தப் பள்­ளி­வா­சல்­ களுக்குச் செல்லலாம்.

"இந்த விரி­வான வச­தி­யால் கடந்த ஆண்­டின் ஹஜ்­ஜுப் பெரு­நா­ளை­விட இவ்­வாண்டு அதி­க­மான பேர் பள்­ளி­வா­சல்­களில் தொழுகை மேற்­கொள்ள முடிந்­துள்­ளது. சமூ­கப் பர­வல் மோச­ம­டைந்து வந்­தா­லும் பாது­காப்­பான முறை­யில் பெரு­நாள் தொழு­கையை மக்­கள் மேற்­கொள்ள முன்­னெச்­ச­ரிக்கை நட ­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன," என்று கூறி­னார் லிட்­டில் இந்­தி­யா­வின் டன்­லப் ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர் திரு முஹம்­மது சித்­திக், 37.

"வழக்கமான நிலையில் எவ­ரும் எந்­தப் பள்­ளி­வா­ச­லுக்­கும் போக­லாம். ஆனால் பாது­காப்­பிற்கு முன்­னு­ரிமை கொடுத்து புரிந்­து­ணர்­வு­டன் இருக்க வேண்­டும். நடப்­பில் உள்ள சட்­டத்திட்­டங்­களை மதித்து அனை­வ­ரும் பாது­காப்­பான முறை­யில் பெரு­நாளை கொண்­டா­டு­வோம்," என்­றார் அவர்.

அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் 'மேலும் பாது­காப்­பான' பள்­ளி­ வாசல் பட்­டி­ய­லில் உள்­ளது. அங்கு மூன்று தொழு­கைக் கூடங்­களில் மூன்று நேரத்­திற்­குத் தொழுகை இடம்­பெ­று­கிறது. மொத்­தம் 450 பேர் இன்று அங்கு பெரு­நாள் தொழு­கையை மேற்­கொள்­வர்.

தொழு­கைக்­குப் பதிவு செய்­த­வர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடா­தவராக இருந்­தால் நிகழ்­வுக்கு முந்­தைய விரைவு பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் அரு­கி­லுள்ள மருந்­த­கத்­து­டன் இணைந்து ஏற்­பா­டும் செய்­துள்­ளது.

சவுத் பிரிட்ஜ் சாலை­யில் உள்ள ஜாமியா சூலியா பள்­ளி­வா­ச­லில் 50 பேர் பங்கேற்கக்கூடிய மூன்று தொழுகை நேரங்­கள் உண்டு.

நோய்ப் பர­வல் சூழ­லால் பள்­ளி ­வா­சல்­களில் தொழுகை மேற்­கொள்ள முடி­ய­வில்­லையே என்ற ஆதங்­கத்­தில் பலர் இருந்­தா­லும் ஏமாற்­ற­மாக அதைக் கரு­தா­மல் வீட்­டில் குடும்­பத்­தி­ன­ரு­டன் தொழு­கையை மேற்­கொள்ள கிடைத்த அரிய, புனித வாய்ப்­பா­கக் கரு­த­வேண்­டும் என்று கூறி­னார் ஜாமியா சூலியா பள்­ளி­வா­ச­லின் நிர்­வா­கக் குழுத் துணைத் தலை­வர் திரு ‌ஷேக் ஃபக்­ரு­தீன், 53.

"ஈதுல் அத்ஹா என்று அழைக்­கப்­படும் ஹஜ்­ஜுப் பெரு­நாள் ஒரு தியா­கத் திரு­நாள். காலத்­தின் சூழ்­நி­லை­யால் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வர­மு­டி­யா­த­வர்­கள் மற்­ற­வர்­க­ளுக்­குக் கொடுக்­கும் வாய்ப்­பைத் தியாக உணர்­வோடு வீட்­டில் மன­நி­றை­வோடு கொண்­டா­ட­வேண்­டும்," என்­றார் அவர்.

தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக இந்த ஆண்­டும் குர்­பான் சடங்கு சிங்­கப்­பூ­ரில் நடை­பெற வில்லை.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஆடு­கள் குர்­பான் செய்­யப்­பட்டு இறைச்சி மூன்று, நான்கு நாட்­கள் கழித்து சிங்­கப்­பூர் வந்­த­டை­யும் என்­றும் அவற்றை பதிவு செய்­த­வர்­க­ளின் வீடுகளுக்கு சனிக்­கி­ழமை வாக்­கில் விநி­யோ­கம் செய்­யப்­படும் என்று திரு ஃபக்­ரு­தீன் தெரி­வித்­தார்.

"பள்­ளி­வா­சல்­களில் குர்­பான் சடங்­குக்­கான ஆடு­களை வாங்க பதிவு நடை­பெற்­றது. எங்­க­ளுக்­குக் கிடைத்த 120 ஆடு­க­ளின் பதி­வும் தீர்ந்­து­விட்­டது," என்­றார் அவர்.